கோயம்புத்தூர்-க்கு வரும் அமெரிக்க கடை.. அதுவும் இந்த இடத்திலா..? அடுத்த லூலூ மால் எஃபெக்ட்..!!
தமிழ்நாட்டில் வேகமாக வளரும் முக்கிய நகரம் மட்டும் அல்லாமல் பெங்களூர்-க்கு இணையாக ஐடி நகரமாக உருவெடுத்திருக்கும் கோயம்புத்தூரில் அடுத்தடுத்து பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தனது அலுவலகத்தைத் திறந்து வருகிறது.
இதற்கு ஏற்றார்போல் ஐடி ஊழியர்களையும், கார்பரேட் ஊழியர்களையும் ஈர்க்கும் வகையிலான ரீடைல் கடைகள், பிராண்டுகள், நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைக் கோயம்புத்தூரில் விரிவாக்கம் செய்து வருகிறது. சமீபத்தில் லூலூ மால் எந்த அளவுக்குக் கோவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் பெரு நகரங்களில் மட்டுமே டார்கெட் செய்து இயங்கி வரும் ஸ்டார்பக்ஸ் தற்போது கோயம்புத்தூரில் தனது கடையைத் திறக்கும் பணிகளை விறுவிறுப்பாகச் செய்து வருகிறது. பெங்களூரில் பல இடத்தில் ஸ்டார்பக்ஸ் கடைகள் திறக்கப்பட்டுப் பல கோடிக்கு ஒவ்வொரு மாதமும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது, இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக கோயம்புத்தூரில் முதல் கிளை விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த புதிய கடையில் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூரில் ஸ்டார்பக்ஸ் கடை மிகவும் பிரபலமான லட்சுமி மில்ஸ் அர்பன் சென்டரில் திறக்கப்பட உள்ளது, லூலூ மால்-க்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்குமா..? கோவை ஐடி ஊழியர்கள் ஸ்டார்பகஸ் கடைக்கு செல்வார்களா..? பொறுத்திருந்து பார்ப்போம்.
டாடா கட்டுப்பாட்டில் இந்தியாவில் இயங்கி வரும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தற்போது 390 இடங்களில் கடைகளை நடத்தி வரும் நிலையில், இந்த எண்ணிக்கையை 2028ஆம் ஆண்டுக்குள் 1000 ஸ்டோர்களாக உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க ஸ்டார்பக்ஸ் அமெரிக்க நிர்வாகத்தில் மார்ச் 2023 இல் ஹோவர்ட் ஷூல்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகினார். ஆனால் ஷூல்ட்ஸ் உறுதியாக வெளியேறியதாகத் தெரியவில்லை
நீண்டகால தலைமை நிர்வாக அதிகாரி பதவில் இருந்த ஹோவர்ட் ஷூல்ட்ஸ் இரண்டு முறை பொறுப்புகளைப் பிறருக்கு ஒப்படைக்க முயற்சி செய்த போது, இரண்டு முறையும் அவர் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரி பணிக்கு வந்தார்.
ஆனால் இந்த வாரம், ஸ்டார்பக்ஸில் ஷூல்ட்ஸ் சகாப்தம் அதிகாரப்பூர்வமாக முடிந்துவிட்டது என்பதற்கான உறுதியான அறிகுறி தெரிவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.