அமீரா ஷா: இந்திய ஹெல்த்கேர் துறையில் கலக்கும் ஒரு பெண்.. யார் இவர்..?
நாட்டின் மிகப் பெரிய ஹெல்த்கேர் கம்பெனிகளில் ஒன்றின் பின்புலமாக விளங்குகிறார் அமீரா ஷா. அமெரிக்காவில் மிக அதிகமான சம்பளம் வாங்கிய வேலையை தனது லட்சியத்துக்காக உதறித் தள்ளிவிட்டு இந்தியாவுக்கு திரும்பினார்.
அப்போது அவருக்கு வயது 21.டாக்டர்கள் நிரம்பிய குடும்பத்தில் பிறந்த அமீரா ஷா மருத்துவத் தொழிலை தேர்ந்தெடுக்கவில்லை. இருப்பினும் தனது தொழில்முனையும் சாதுர்யத்தால் தந்தையின் சிறிய லேப்பை ரூ.8500 கோடி மதிப்புள்ள நிறுவனமாக அமீரா ஷா உயர்த்தினார். மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தான் அமீரா ஷா உள்ளார். மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் ஏழு நாடுகளில் ஒரு முன்னணி டயாக்னாஸ்டிக் செயின் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார் அமீரா ஷா. மும்பை மற்றும் அமெரிக்காவின் ஆஸ்டின் ஹெச்ஆர் காலேஜில் காமர்ஸ் மற்றும் எக்கனாமிக்ஸில் பட்டப்படிப்புகளை முடித்துள்ளார்.தனது சம்பளத்தில் திருப்தியடையாத அமீரா 2001 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பி வந்து தனது தந்தையின் நிறுவனத்தை பொறுப்பேற்றுக் கொண்டார். அமீரா டாக்டர் சுஷில் ஷா, டாக்டர் துரு ஷாவின் மகள் ஆவர். அவரது தந்தை ஒரு பேத்தாலஜிஸ்ட். தாயார் கைனகாலஜிஸ்ட். அவரது சகோதரி ஜெனடிசிஸ்ட். ஆனால் அமீரா மருத்துப்படிப்பைத் தேர்ந்தெடுக்காமல் வேறு பாதையில் சென்றார். பைனான்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் நிபுணர் ஆனார்.ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் ஓனர் கம் பிரசிடெண்ட் மேனேஜ்மெண்ட் புரோகிராம் படிப்பை முடித்தார். தனது தந்தையின் தொழிலில் கம்ப்யூட்டர் பயன்படுத்ததால் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை கண்டறிந்த அமீரா டெக்னாலஜியை புகுத்தினார். 2006இல் தனது கம்பெனிக்காக நிதியைத் திரட்டினார். 2015இல் தனிப்பட்ட முறையில் ரூ.600 கோடி கடன் வாங்கினார்.3 நாளில் ரூ.7200 கோடியை செலவழித்த இந்திய பணக்காரர்கள்.. சிட்டாய் பறந்த 1,113 சொகுசு வீடுகள்..!!அந்தப் பணத்தில் ஒரு கம்பெனியில் பங்குகளை வாங்கினார். அதிலிருந்து நல்ல வருவாய் கிடைத்தது. 2022 ஆம் ஆண்டுக்கான ஹுருண் பணக்காரப் பெண்கள் பட்டியலில் அமீரா ஷா இடம் பெற்றார். 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் பார்ச்யூன் இந்தியாவின் ஐம்பது மிக சக்திவாய்ந்த பெண் தொழில் அதிபர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.ஹெல்த்கேர் துறையில் உலகளவில் சிறந்த தலைவராக 2018, 2019 ஆம் ஆண்டு பிசினஸ் டுடே பட்டியலில் இடம்பெற்றார். அவரது நிகர சொத்து மதிப்பு இப்போது ரூ.5,950 கோடி ஆகும். 2019இல் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.தற்போது ஐந்து கோவிட் லேப்களை மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனம் சொந்தமாக நடத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான கோவிட் பரிசோதனைகளை செய்து வருகிறது. அவரது தலைமையில் டயாக்னாஸ்டிக்ஸில் துல்லியமான தரவுகளை தந்தது.