பைக் பிரியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திய 2023ஆம் ஆண்டின் டாப் 10 பைக்குகள்!
இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் தங்களது தினசரி போக்குவரத்திற்காக இரு சக்கர வாகனங்களை நம்பியுள்ளனர். கார் வைத்திருப்பவர்கள் கூட, தங்கள் வீடுகளில் டூவீலர்களை வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் கார் பிரியர்களை விட பைக் பிரியர்கள் சற்று அதிகம் என்றே சொல்லலாம். ஏனென்றால் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் ஸ்டைலிஷ்ஷான அதே சமயம் செயல்திறன் மிக்க டூவீலர்களில் சாலைகளில் அதிகவேகத்தில் செல்ல விரும்புகிறார்கள். 2023 நிதியாண்டில், இந்தியாவில் சுமார் 15.86 மில்லியன் இருசக்கர வாகனங்கள் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
விரைவில் முடிவடைய இருக்கும் 2023-ம் ஆண்டில் லட்சக்கணக்கான பைக் பிரியர்களை உற்சாகப்படுத்திய டாப் 10 புதிய பைக்ஸ்களின் பட்டியலைதான் இங்கே பார்க்க போகிறோம். கீழே நாம் பார்க்கவிருக்கும் 10 மோட்டார் சைக்கிள்கள் மிகவும் வெற்றிகரமான டூ வீலர்களாகவும் மாறியிருக்கின்றன. டாப் 10 பைக்குகளின் பட்டியலை நாம் இங்கே 10-லிருந்து 1 என்ற வரிசையில் பார்க்கலாம்.
10. கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ் (KTM 390 Adventure X):
இந்த பைக் KTM 390 அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை அடிப்படையாக கொண்ட பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் ஆகும். KTM நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் எக்ஸ் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் ரூ.2.80 லட்சமாக இருக்கிறது. எனினும் எலக்ட்ரானிக்ஸ் சூட் (Electronics Suite) இல்லாதது இதில் குறைபாடாக பார்க்கப்படுகிறது.
9. ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் (Hero Karizma XMR):
Hero MotoCorp நிறுவனம் சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு புதிய கரிஸ்மா XMR -ஐ நாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.73 லட்சமாக இருந்தது, அதன் பின்னர் இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,79,900-ஆக உயர்த்தப்பட்டது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய 210cc, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் 25.1bhp பவர் மற்றும் 20.4Nm பீக் டார்க்கை வெளிப்படுத்துகிறது