IPL பணத்திற்கு மத்தியில் இப்படி ஒரு வீரரா? 12 ஆண்டுகளாக டெஸ்ட்க்கு ஒரே தொப்பி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
கேப் டவுன் : டெஸ்ட் கிரிக்கெட்டே வேண்டாம் என்று பல சர்வதேச வீரர்கள் ஐபிஎல் உள்ளிட்ட டி20 தொடர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் இந்தியாவில் மட்டும் இந்த நிலைமை இல்லை. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் நடத்தும் எஸ் ஏ டி 20 தொடரில் விளையாடுவதற்காக பல முன்னணி வீரர்கள் பணத்தை நோக்கி சென்று விட்டார்கள்.
இதனால் அதே காலகட்டத்தில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்கள் தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சாகின் அப்ரிடி மூன்றாவது டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
இப்படி உலகம் முழுக்க டெஸ்ட் கிரிக்கெட் வேண்டாம் என வீரர்கள் முடிவெடுத்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு மத்தியில் பணத்தைவிட டெஸ்ட் கிரிக்கெட் தான் முக்கியம் என ஒரு கிரிக்கெட் வீரர் வாழ்ந்து வருகிறார். அவர்தான் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரராக இருந்த டீன் எல்கார்.இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் உடன் டீன் ஏல்கார் ஓய்வு பெற்றார்.
அவர் அணிந்திருந்த தொப்பி தான் தற்போது ரசிகர்களை நெகிகழ்ச்சி அடைய செய்திருக்கிறது. டீன் எல்கர் இதுவரை தென்னாபிரிக்க அணிக்காக 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டார். தன்னுடைய முதல் டெஸ்ட்டை 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் அறிமுகமானார்.அன்றிலிருந்து தனது கடைசி டெஸ்ட் வரை டீன் எல்கார் ஒரே ஒரு தொப்பியை தான் அணிந்திருக்கிறார்.
தம் நாட்டுக்காக விளையாட வழங்கப்பட்ட தொப்பியை தன் உயிரினும் மேலாக எல்கர் பாதுகாத்து வருகிறார். மற்ற வீரர்கள் எல்லாம் புதுப்புது தொப்பியை மாற்றி வந்தாலும் டீன் ஏல்கர் தன்னுடைய முதல் தொப்பியை இன்று வரை பாதுகாத்து வருகிறார். இது குறித்து எலகரிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கு, உங்களுக்கெல்லாம் உலகக்கோப்பை எவ்வளவு முக்கியமோ அது போல் எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் முக்கியம்.