கடந்த தேர்தலை விட இந்த தேர்தலுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் அதிகரிப்பு :இந்திய தேர்தல் ஆணையம்..!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் அதிகப்பட்சமாக ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் செய்யும் செலவுகளை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ரகசியமாக கண்காணித்து வருவார்கள். பொதுக்கூட்ட மேடையில் இருந்து கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு டீ, பிரியாணி வாங்கி கொடுப்பது, பேனர் கட்டுவது உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிப்பார்கள்.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தேர்தல் நடைபெறும்போது ஒருமுறையும், தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் கொடுக்கும் கணக்கு மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் கொடுக்கும் கணக்குகளை தேர்தல் ஆணையம் ஒப்பிட்டு பார்க்கும். தேர்தல் ஆணையம் அனுமதித்ததைவிட அதிகமாக செலவு செய்தால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால்கூட அவர்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்: ஆண்டு செலவு செய்யும் தொகை 2014 ரூ.40 லட்சம் 2019 ரூ.70 லட்சம் 2024 ரூ.95 லட்சம்
சட்டமன்ற தேர்தல்: 2014 ரூ.16 லட்சம் 2019 ரூ.28 லட்சம் 2024 ரூ.40 லட்சம்