கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பெரும் பரபரப்பு…!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் திங்கட்கிழமைகளில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்காக பலர் காத்திருக்கையில் ஒவ்வொருவராக பரிசோதித்து காவலர்கள் அனுமதித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்த முதியவர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோலை மறைத்து வைத்திருந்தார். இந்நிலையில் திடீரென பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தினர்.அத்துடன் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். அப்போது முதியவர் என்னை சாக விடுங்கள் . உயிருடன் இருக்க விரும்பவில்லை. எனக் கூறியபடி முதியவர் கதறி அழுதார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சண்முகசுந்தரம். இவர் கோவை பட்டணம் பகுதியில் வசித்து வந்தவர். இவர் பட்டா, சிட்டா கேட்டு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்தார்.

சண்முகசுந்தரத்திற்கு சொந்தமான நிலம் பட்டணம் பகுதியில் இருந்து வருகிறது. இதற்கு பட்டா, சிட்டா கேட்டு பல முறை ஆட்சியர் அலுவலகத்திலும், பிற அதிகாரிகளிடமும் மனு அளித்து வந்தார். மேலும் ஜமா பந்தி நிகழ்ச்சிகளிலும் மனு அளித்த போதும், இதுவரை தனக்கு பட்டா, சிட்டா கிடைக்கவில்லை என சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சித்தார் .

இதையடுத்து விசாரணைக்காக சண்முகசுந்தரத்தை காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்து சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *