அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும்போது வானத்தில் வட்டமிட்ட கழுகு!

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று பிரதமர் மோடி முன்னிலையில் கோலாகலமாக நடைபெறு வருகிறது. இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பிரபலங்கள் மற்றும் மதத் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ராம் லல்லா சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து மலர் தூவி வழிபாடும் நடத்தினார். அப்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தார்.

இந்நிலையில், இந்த நிகழ்வின்போது அயோத்தி ராமர் கோயிலில் வியக்க வைக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. சரியாக ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நேரத்தில் ராமர் கோயிலுக்கு மேல் வானத்தில் ஒரு கழுகு வட்டமிட்டுள்ளது.

கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளின்போது வானத்தில் கழுகு வட்டமிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கும் என்பது தொன்றுதொட்டு நம்பிக்கை. அது அயோத்தியிலும் அரங்கேறி இருக்கிறது. வானத்தில் பருந்து வட்டமிடும் காட்சியைக் கண்டவர்கள் பக்திப் பரவசத்துடன் வணங்கி மகிழ்ந்தனர்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு மேல் கழுகு வட்டமிட்டும் இந்த அபூர்வ காட்சியின் வீடியோவும் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாகி இருக்கிறது. வீடியோவைப் பார்த்த பலரும் ஜெய் ஶ்ரீராம் என்று பக்திப் பெருக்குடன் ரிப்ளை செய்து வருகின்றனர்.

குடமுழுக்கு விழாவின்போது கருடன் வட்டமிடவில்லை என்றால் அது அபசகுனமாகவும் கருதப்படுகிறது. அந்தக் குடமுழுக்கு விழாவில் ஏதேனும் குறை இருக்கலாம் என்றும் கருதப்படும். ஆனால் சைவ, வைணவ ஆகமங்களிலோ, வைதீக, தாந்த்ரீக சாஸ்திரங்களிலோ கும்பாபிஷேகம் நடக்கும்போது கருடன் வரவேண்டும் என்று எந்த விதியும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கருட தரிசனம் பல நன்மைகளைக் அருளும் என்று நம்பிக்கை நிலவுகிறது. கருடன் வந்து ஆசி புரிவது பெருமாளே வந்து ஆசீர்வதிப்பதற்குச் சமம் என்றும் கருட தரிசனம் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *