தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் கார்… உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா?? கீர்த்தி பாண்டியன் ஆவேசம்
நடிகை கீர்த்தி பாண்டியனின் பக்கத்து வீட்டில் பிரபல நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் ஒன்று பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கார் நிறுவனத்தை டேக் செய்து கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பதிவு கவனம் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக கீர்த்தி பாண்டியன் உள்ளார். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். இவருக்கும் இளம் நடிகர் அசோக் செல்வனுக்கும் இடையே சில வாரங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
சில ஆண்டுகளாக காதலித்து வந்த அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடித்தனர். இருவரும் இணைந்து நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் கீர்த்தி பாண்டியனின் பக்கத்து வீட்டுக்காரர் சரவண குமார் என்பவர் பயன்படுத்தி வந்த எலக்ட்ரிக் கார் பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி பாண்டியன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
இந்த வீடியோவில் எரிந்துள்ள கார் எனது பக்கத்து வீட்டில் இருக்கும் சரவணக்குமார் என்பவருக்கு சொந்தமானது. அவரது வீட்டில் குழந்தைகளும், பெரியவர்களும் இருக்கிறார்கள். இந்த விபத்தின்போது, காரின் அருகே யாராவது இருந்தால் அவரது நிலைமை என்ன ஆகியிருக்கும்? கார் எரிந்தது தொடர்பாக சரவணக்குமார் அளித்துள்ள புகார் மின் அஞ்சலுக்கு கார் நிறுவனம் பதில் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். என்று கூறியுள்ளார். பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக கீர்த்தி பாண்டியன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது அவருக்கு பாராட்டை ஏற்படுத்தி வருகிறது.
Are MG EV cars safe to use ? @rajeev_chaba @MGSupportIndia @MGMotorIn @MGmotor would you atleast respond for my messages and mails?
Is this how you treat your customers? #mgevcarburst #evcarburst #electriccar #mgmotors #fplmotors #ElectricCars #mgmotorsindia #mgzsev pic.twitter.com/9ZCY61Qchy
— Saravanakumar (@Saravanakumar15) December 24, 2023
விபத்து குறித்து சரவணக்குமார் தனது ட்விட்டர் பதிவில், ‘ரூ. 26.61 லட்சம் கொடுத்து 6 வாரங்களுக்கு முன்பாக எம்.ஜி., MG ZS EV காரை வாங்கினேன். பார்க்கிங்கில் எனது கார் தீப்பிடித்து எரிந்து விட்டது. தீயை அணைப்பதற்கு 30 நிமிடங்கள் வரை ஆனது. இதுபற்றி பலமுறை நிறுவனத்திடம் புகார் அளித்தபோதிலும் இதற்கு அவர்கள் தீர்வு ஏற்படுத்தி தரவில்லை.’ என்று கூறியுள்ளார். விலை உயர்ந்ததும், பாதுகாப்பு நிறைந்ததுமாக கூறப்படும் எம்.ஜி. நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.