ஆக்டிவாவை போல ஃபேமிலிக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியா வரபோகுது! களமிறக்க போகும் அந்த நிறுவனம் எது தெரியுமா?
இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)-யும் ஒன்றாகும். கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் டூ-வீலரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகையையே அந்நிறுவனம் டீசர் புகைப்படத்தின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றது.
கருவறைக்ககுள் குழந்தை தெரியும் ஸ்கேன் படத்தைப் போல ஓர் படத்தை அது வெளியிட்டு இருக்கின்றது. அது வெளியிட்டு இருக்கும் ஸ்கேன் படத்தில் நிறுவனத்தின் புதுமுக ஸ்கூட்டரே இடம் பெற்றிருக்கின்றது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்னும் ஒரு சில தினங்களில் அது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே தற்போது நிறுவனம் புதிய வாகனத்தின் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது. அந்த புதிய மின்சார வாகனம் ஏத்தர் ரிஸ்தா (Ather Rizta) எனும் பெயரில் இந்தியாவை களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இது ஃபேமிலிக்கான வாகனமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இப்போது விற்பனையில் இருக்கும் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மாடல்கள் அனைத்தும் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்டவையாக இருக்கின்றன. தோற்றத்தில் மட்டுமல்ல பயன்பாட்டிலும் அவர் ஸ்போர்ட்டி வகை வாகனமாகவே இருக்கின்றன. ஆகையால், இப்போது விற்பனையில் இருக்கும் வாகனங்களிடம் இருந்து புதுமுக ரிஸ்தா இ-ஸ்கூட்டர் மிகப் பெரிய அளவில் மாறுபட்டுக் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போதைய நிலவரப்படி ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் 450 எக்ஸ், 450 எஸ் மற்றும் 450அபெக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே விரைவில் ஏத்தர் ரிஸ்த இணைய இருக்கின்றது. இதனை பிளாட்பாரத்தைக் கொண்டு நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வாகனத்தை ஏத்தர் கம்யூனிட்டி டே செலிபரேஷன் 2024 நிகழ்வின் போது அறிமுகம் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த 6 மாதங்களில் அந்த வாகனத்தை டெலிவரி வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஏத்தர் அறிவித்து இருக்கின்றது. சிறப்பம்சங்களைப் பொருத்த வரை இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏத்தரின் மற்ற தயாரிப்புகளைப் போலவே அதிகளவில் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உதாரணமாக, பெரிய தொடுதிரை, அதிக ரேஞ்ஜ் திறன் மற்றும் பன்முக இணைப்பு வசதிகள் ஆகியவை இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், வேகம் மற்றும் லுக்கில் குடும்பங்களுக்கானதாக இது இருக்கும். உதாரணமாக டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போல அது இருக்கும்.
ஆகையால், ஏத்தர் ரிஸ்தா விற்பனைக்கு வரும் எனில் இந்த இரண்டு தயாரிப்புகளுக்கும் மிகப் பெரிய போட்டியாக அது அமையும். மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது. குடும்பங்களுக்கான வாகனமாக இது விற்பனைக்கு வர இருப்பதால் மலிவு விலையில் அது விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இப்போதைய நிலவரப்படி இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய எந்தவொரு முக்கிய விபரங்களையும் அது பகிர்ந்துக் கொள்ளவில்லை. வெகு விரைவில் அதன் விற்பனைக்கான வருகையை முன்னிட்டு ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் ஒவ்வொரு முக்கிய தகவல்களாக அவிழ்த்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே இந்த செயலை அது வரும் நாட்களில் செய்ய இருக்கின்றது.