இன்போசிஸ் வரலாற்றில் மறக்க முடியாத விஷால் சிக்கா..! அப்பவே ஏகப்பட்ட சம்பளம்..!!

இந்திய ஐடி துறையில் மிகவும் பிரபலமானவர் விஷால் சிக்கா. நாட்டின் மிகப் பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் முன்னாள் சிஇஓ இவர். உலகம் முழுவதும் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்க செய்துள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.6,95,000-க்கும் மேல் ஆகும்.

நாராயணமூர்த்தியால் நிறுவப்பட்ட இன்போசிஸ் இந்தியாவின் அதிபுத்திசாலிகள் பலரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அதில் விஷால் சிக்காவும் ஒருவர். இவரை தெரியாதவர்கள் யாரேனும் இருக்கலாம், 2014 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுவரை இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் சிஇஓவாகவும் விஷால் சிக்கா பதவி வகித்துள்ளார்.

இன்றைக்கு இன்போசிஸ் பல உச்சங்களைத் தொட்டுவிட்டது. இந்த உயரத்தைத் தொடுவதற்கு நிறுவனத்துக்காக விஷால் சிக்காவும் கணிசமான பங்கை அளித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாகவும் நிர்வாக இயக்குநராகவும் விஷால் சிக்கா நியமிக்கப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு வரை அவர் இன்போசிஸ்க்கு தலைமை வகித்தார். விஷால் சிக்கா தனது பதவிக்காலத்தில் நாட்டிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்களில் ஒருவராக இருந்தார். அப்போது அவரது சம்பளம் ரூ.48 கோடிக்கும் மேல் ஆகும்.

இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு விலகிய பின்பு 2019 ஆம் ஆண்டில் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் கம்பெனியான வியானய் என்ற நிறுவனத்தை தொடங்கி அதில் முழுமூச்சாக விஷால் சிக்கா தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் விஷால் சிக்கா பிறந்தார். அவர் பிறந்த பின்னர் அவரது குடும்பம் குஜராத்துக்கு குடிபெயர்ந்தது. அங்கு அவர் பள்ளிப் படிப்பை முடித்தார். பட்டப்படிப்புக்காக வதேதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இளநிலை படிப்பில் சேர்ந்தார். ஆனால் அதை விட்டுவிட்டு நியூயார்க்கில் உள்ள சைராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார்.

தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் அவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் 1996 ஆம் ஆண்டில் பிஎச்டி படிப்பை முடித்தார்.

தனது கல்வியை முடித்த பின்னர் Xerox நிறுவனத்தின் ஆராய்ச்சி லேபில் வேலைக்குச் சேர்ந்தார்.

சில காலம் அங்கு வேலை பார்த்தபின் அங்கிருந்து விலகி இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கினார். அவற்றை பின்னர் இரு பெரிய நிறுவனங்களிடம் விஷால் சிக்கா விற்றுவிட்டார். தனது இரண்டாவது ஸ்டார்ட்அப்பான Bodha.com-ஐ Peregrine Systems என்ற நிறுவனத்துக்கு விற்றபின் அதே நிறுவனத்தில் ஏரியா வைஸ் பிரசிடெண்ட்டாக வேலைக்குச் சேர்ந்தார்.

வெகு குறைந்த நாட்கள்தான் அங்கு வேலை பார்த்தார். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டில் SAP என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அவர் 12 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். அப்போது அவர் பல்வேறு மூத்தப் பதவிகளை வகித்தார்.

இதனிடையே 2007 ஆம் ஆண்டில் சாப் நிறுவனத்தின் முதல் சிடிஓவாக ஆனார். சிடிஓ என்ற வீதத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த டெக்னாலஜி ஆர்க்கிடெக்சர் மற்றும் சாப் நிறுவனத்தின் தயாரிப்பு உத்திகளுக்கும் பொறுப்பாக இருந்தார்.

இன்னும் விஷால் சிக்காவைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் சாப் நிறுவனத்தின் மிக முக்கியமான இன்-மெமரி டேட்டா பிளாட்பார்மான SAP HANA-வை உருவாக்கியப் பெருமை இவருக்கு உண்டு. சாப் நிறுவன வரலாற்றிலேயே மிக அதிகமாக விற்று வரும் பிளாட்பார்ம் இது.

விஷால் சிக்கா தற்போது ஆரக்கிளின் இயக்குநர்கள் குழுவிலும், பிஎம்டபிள்யூ குரூப்பின் மேற்பார்வைக் குழுவிலும், ஸ்டான்போர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யுமன் சென்டர்டு ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

அத்துடன் அவரது வியானய் நிறுவனம் சான்பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்டார்ட்அப் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் தொடர்பான சாப்ட்வேர் சர்வீஸ்களை செய்து வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *