ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டம்.. கலந்து கொள்ளும் ரன்பீர் – ஆலியா.. லைக்ஸை குவிக்கும் வீடியோ…

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தி சினிமா நடிகர்கள் ரன்பீர் கபூர் அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட் ஆகியோர் மும்பையில் இருந்து ஜாம் நகருக்கு வந்தடைந்தனர். முன்னதாக அவர்கள் புகைப்பட கலைஞர்களுக்கு கையசைத்த வீடியோ ஒன்று ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இவர்களுடன் பழம் பெரும் நடிகையும் ரன்பீர் கபூரின் தாயாருமான நீது கபூரும் ஜாம் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்கள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் தங்களது திருமணத்திற்கு முந்தைய விழாக்களை மார்ச் 1 முதல் 3 வரை ஜாம்நகரில் நடத்த உள்ளனர்.

சல்மான் கான், சர்வதேச புகழ் பெற்ற பாடகி ரிஹானாவை தவிர, மேஜிக் கலைஞர் டேவிட் பிளேன் மற்றும் அரிஜித் சிங், அஜய்-அதுல் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் உள்ளிட்ட சிறந்த இந்திய இசைக்கலைஞர்களும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

அமிதாப் பச்சன், ஷாருக்கான், அமீர் கான் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல இந்திய பிரபலங்கள் குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றனர். பாலிவுட் பிரபலங்கள் அஜய் தேவ்கன், கஜோல், சைஃப் அலிகான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், அலியா பட், விக்கி கவுஷல், கத்ரீனா கைஃப், கரண் ஜோஹர், வருண் தவான், சித்தார்த் மல்ஹோத்ரா, ஷ்ரத்தா கபூர், கரிஷ்மா கபூர், சங்கி பாண்டே, போனி கபூர், அனில் கபூர் உள்ளிட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், ஜாம் நகருக்கு ரன்பீர் கபூர் தனது மனைவி ஆலியா பட், தாயார் நீது கபூர் மற்றும் குழந்தைகளுடன் ஜாம் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

முன்னதாக நேற்று ஜாம் நகர் மற்றும் அதை சுற்றியுளள் கிராமத்தினர் 51 ஆயிரம் பேருக்கு முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பிரமாண்ட விருந்து அளித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் கவனம் பெற்று வருகிறது. இதேபோன்று, ஆனந்த் அம்பானி நடத்தி வரும் வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் மறு வாழ்வியல் மையத்தின் பணிகள் குறித்த வீடியோக்கள் ட்ரெண்டிங்கள் உள்ளன

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *