ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டம்… ஜாம் நகருக்கு பலத்த பாதுகாப்புடன் சல்மான் கான் வருகை

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நாளை தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்க இந்தி சினிமா நட்சத்திரம் சல்மான் கான் தற்போது ஜாம் நகருக்கு வந்துள்ளார். பலத்த பாதுகாப்புடன் அவர் விமான நிலையத்திலிருந்து வந்த காட்சிகள் அவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

சல்மான் கான், சர்வதேச புகழ் பெற்ற பாடகி ரிஹானாவை தவிர, மேஜிக் கலைஞர் டேவிட் பிளேன் மற்றும் அரிஜித் சிங், அஜய்-அதுல் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் உள்ளிட்ட சிறந்த இந்திய இசைக்கலைஞர்களும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் மார்ச் 1 முதல் 3 வரை நடைபெறவுள்ளது. அமிதாப் பச்சன், ஷாருக்கான், அமீர் கான் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல இந்திய பிரபலங்கள் குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

பாலிவுட் பிரபலங்கள் அஜய் தேவ்கன், கஜோல், சைஃப் அலிகான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், அலியா பட், விக்கி கவுஷல், கத்ரீனா கைஃப், கரண் ஜோஹர், வருண் தவான், சித்தார்த் மல்ஹோத்ரா, ஷ்ரத்தா கபூர், கரிஷ்மா கபூர், சங்கி பாண்டே, போனி கபூர், அனில் கபூர் உள்ளிட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் சல்மான் கான் பலத்த பாதுகாப்புடன் ஜாம் நகருக்கு வருகை தந்தார். அதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

இந்திய, தாய், ஜப்பானிய, மெக்சிகன், பார்சி மற்றும் பான் ஆசியன் உள்ளிட்ட உலகளாவிய உணவு வகை மெனுவுடன் சுமார் 2,500 உணவுகள் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் விருந்தினர்களுக்கு வழங்கப்படவுள்ளது. விருந்தினர்களுக்கு 75 வகை உணவுகளுடன் காலை உணவும், 225 வகைகளுடன் மதிய உணவும், சுமார் 275 வகை உணவுகளுடன் இரவு உணவும், 85 வகை உணவுகளுடன் நள்ளிரவு உணவும் வழங்கப்படும். நள்ளிரவில் தொடங்கும் நள்ளிரவு உணவு அதிகாலை 4 மணி வரை நடைபெறும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *