அனந்த் அம்பானி வருங்கால மாமியார்.. ஷய்லா மெர்ச்சன்ட் பற்றி தெரியுமா உங்களுக்கு..?!
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளது.
அனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நடைபெற்றது.
திருமணம் குஜராத் ஜாம்நகரில் மார்ச் மாதம் நடக்க உள்ளது.இதுபற்றி ராதிகா குடும்பத்தார் கூறுகையில், அனந்த் மற்றும் ராதிகா ஒருவரையொருவர் பல வருடங்களாக அறிந்தவர்கள், நிச்சயதார்த்த சடங்கு அவர்களின் திருமணத்தின் முறையான பயணத்தை வரும் மாதங்களில் தொடங்குகிறது. முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தம்பதியரின் மூன்று பிள்ளைகளில் இளையவர் அனந்த் அம்பானி. அனந்த் அம்பானி தனது பள்ளிப் படிப்பை திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.பில்லியனர் விரென் மெர்ச்சன்ட், ஷய்லா மெர்ச்சன்ட்டின் மூத்த மகள் ராதிகா மெர்ச்சன்ட். ராதிகா தனது பள்ளிப்படிப்பை கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி மற்றும் மும்பையில் உள்ள எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் முடித்தார்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.விரென் மற்றும் ஷய்லா மெர்ச்சன்ட் இணைந்து என்கோர் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். என்கோர் ஹெல்த்கேர் பார்மாசூட்டிகல் நிறுவனத்தை அனந்த் அம்பானியின் மாமியார் நிர்வாக இயக்குநராக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.90களில் ஷய்லா விரென் மெர்ச்சன்ட்டை திருமணம் செய்தார். அவர்களது திருமணத்துக்குப் பின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஷய்லா பொறுப்பேற்றார்.
அவரது நிறுவனத்தின் நிகர மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2000 கோடி ஆகும்.ஷய்லாவுடன் ராதிகாவும் அவரது சகோதரி அஞ்சலியும் போர்டு டைரக்டர்களாக உள்ளனர். டாப் தொழிலதிபராக மட்டுமல்லாமல் ஷய்லா மெர்ச்சன்ட் அவரது சிறப்பான ஸ்டைல் மற்றும் பேஷன் தேர்வுகளுக்காக பிரபலமாக உள்ளார். ஷய்லா, ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் தலா ரூ.10 கோடி சொத்து வைத்துள்ளனர்.விரென் மெர்ச்சன்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.755 கோடி ஆகும்.
ராதிகா மெர்ச்சன்ட் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத் தலைவரும் மாமனாருமான முகேஷ் அம்பானியுடன் சேர்ந்து பல கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளை நடத்துவார். ஆர்ஐஎல் டைரக்டர் மனோஜ் மோடியுடன் சேர்ந்து ஸ்ரீநாத்ஜி கோயிலுக்கு 2022 ஆம் ஆண்டில் சென்று வழிபட்டார்.