|

நடிகை ரோஜாவுக்கு பேட்டிங் கற்று தந்த ஆந்திர முதல்வர் ஜெகன்! அடுத்த பால் அடிச்சாரு பாருங்க சிக்ஸ்! செம

பேட் பிடிக்கத் தெரியாமல் திணறிய ஆந்திர அமைச்சர் ரோஜாவுக்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேட்டிங் கற்றுக் கொடுத்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

சினிமா புகழால் அரசியலிலும் சாதிக்க முயற்சிக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் வெற்றி பெறுவதில்லை. இதற்கு நாம் சிவாஜி, கார்த்திக் என்ற மிகப் பெரிய லிஸ்டையே சொல்ல முடியும்.

ஆனால், அனைத்தையும் தாண்டி சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றி பெற்ற சிலர் இருக்கவே செய்கின்றனர். அப்படி இரண்டிலும் வெற்றி பெற்ற ஒருவர் தான் ரோஜா. தென்னிந்திய சினிமாக்களில் கலக்கிய அவர், இப்போது ஆந்திர அமைச்சராக இருக்கிறார்.

சொல்லிக் கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி:

ஆந்திர அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள அவர் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையே இன்று ஆந்திர மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் விளையாடத் தெரியாமல் திணறிய நடிகையும் அமைச்சருமான ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேட்டிங் செய்ய கற்றுக் கொடுத்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

‘ஆடுதாம் ஆந்திரா’ அதாவது விளையாடு ஆந்திரா என்ற பெயரில் அங்கே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு பிப். மாதம் வரை இந்தப் போட்டிகள் நடக்கிறது. இதில் முதல் போட்டியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று குண்டூரில் தொடங்கி வைத்தார். அப்போது பேட்டிங் செய்ய சென்ற விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா, கிரிக்கெட் பேட்டை எப்படிப் பிடிப்பது என்று தெரியாமல் தடுமாறினார்.

வீடியோ: அப்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சர் ரோஜாவுக்கு பேட்டை எப்படிப் பிடிப்பது என்று கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு பேட்டிங் செய்த ரோஜா, பந்தைப் பறக்க விட்டார். இதை அருகில் இருந்து பார்த்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கைதட்டி உற்சாகப்படுத்தினார். இது தொடர்பா வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தப் போட்டிகள் அடுத்தாண்டு பிப்.10ஆம் தேதி வரை அதாவது 57 நாட்களுக்கு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு: இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படி மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்துள்ளோம். நல்ல ஆரோக்கியமாக இருக்க விளையாட்டு ரொம்பவே முக்கியம். அதை உணர்த்தவே இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளோம். உடற்பயிற்சி செய்வது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நீரிழிவு நோயைத் தடுக்கும்.

ஆந்திரப் பிரதேசத்தில் கிராமம் வாரியாக நடத்தப்படும் முதல் விளையாட்டுப் போட்டி இதுவாகும்.. இதில் கிரிக்கெட், வாலிபால், கபடி, கோ-கோ மற்றும் பேட்மிண்டன் ஆகிய போட்டிகள் நடைபெறும், கிராமங்களில் இருக்கும் விளையாட்டு திறமைகளைக் கண்டுபிடிப்பதே எங்கள் நோக்கம். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆந்திரா கிரிக்கெட் சங்கம் இந்த போட்டிகளுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. இந்த போட்டியில் 34.19 லட்சம் பேர் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் இந்த போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *