நயனின் திருமணம் நடந்த அதே இடத்தில் மகளின் திருமணத்தை நடத்தும் அனிதா விஜயகுமார் – வைரலாகும் சங்கீத் போட்டோஸ்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் மூத்த மனைவி முத்து கண்ணுக்கு மூன்று பிள்ளைகள், இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கும் மூன்று மகள்கள். இரண்டாவது மனைவி மஞ்சுளா இறந்துவிட்டதால் தற்போது முதல் மனைவி உடன் வசித்து வருகிறார் விஜயகுமார்.
விஜயகுமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர்கள் தான் கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய். அதேபோல் இரண்டாவது மனைவிக்கு ப்ரீத்தா, வனிதா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் பிறந்தனர். இதில் அனிதா விஜயகுமார் மட்டும் தான் சினிமா பக்கம் தலைகாட்டாதவர். மற்ற ஐந்து பேருமே நடித்திருக்கிறார்கள்.
அனிதா விஜயகுமார் மருத்துவம் படித்து டாகடராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு தியா என்கிற மகளும், ஸ்ரீஜெய் கோகுல் என்கிற மகனும் உள்ளனர். இதில் அனிதாவின் மகள் தியாவிற்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. அவரது திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் பீச்சோரம் அமைந்துள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இங்கு தான் நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தை ஒட்டி, மெஹந்தி கொண்டாட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு சங்கீத் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் உறவினர்கள் கலந்துகொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
தியாவின் சங்கீத் விழாவில் நடிகர் அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தி உடன் நடனமாடி அசத்தினார். அதேபோல் நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் வந்து தியாவின் சங்கீத் விழாவில் கலந்துகொண்டார். அனிதா விஜயகுமார் மகளின் சங்கீத் விழாவில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.