தாணுமாலைய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா!

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற இந்து கோயில்களில் பிரசித்தி பெற்ற கோவில் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில்.

 

இந்த கோவிலில் உள்ள 18-அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை மிகவும் சிறப்பு பெற்றது. ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆயிரம் லிட்டர் பால், நல்லெண்ணெய், தயிர்,களபம், சந்தனம், குங்குமம், கறுப்புச் சாறு, இளம் நீர், பஞ்சாமிர்தம், மாதுளை சாறு,நெய், விபூதி, பன்னீர் ஆகிய 16 வகை அடங்கிய சோடச அபிஷேகம் 18-அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நடைபெற அபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்த்தர்களுக்கும் இலவசமாக லட்டு,வடை பிரசாதம் இலவசமாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் ஆன உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *