Anjaraipetti Sambar : ஐந்தரைப்பெட்டி குழம்பு – பருப்பு இல்லாத சாம்பார்! – வித்யாசமான சுவையில் அள்ளும்!
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
பூண்டு – 4 (தட்டியது)
சீரகம் – கால் ஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 கீறியது
தக்காளி – 1 (அரைத்தது)
புளிக்கரைசல் – அரை கப்
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு
பாகற்காய் தவிர எந்த காய்கறிவேண்டுமானாலும் இந்த சாம்பாருக்கு எடுத்துக்கொள்ளலாம்.
கத்தரிக்காய், வெண்டைக்காய், கோவக்காய் ஆகியவை எடுத்தால், அவற்றை தனியாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாழைக்காய், கேரட், பீன்ஸ், காளிஃபிளவர், உருளைக்கிழங்கு என உங்களுக்கு பிடித்த காய்கறிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் பூண்டு இடித்து சேர்க்க வேண்டும். நன்றாக வதக்கியவுடன், அதில் கடலைமாவு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
நன்றாக வதங்கிய பின்னர் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
தேவையான காய்கறிகளை சேர்த்து குழம்பை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கீறிய பச்சை மிளகாய், அரைத்த தக்காளி விழுது, புளிக்கரைசல் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
சூடான சாதத்தில் சேர்த்து பரிமாற சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள மிக்ஸர் மட்டுமே போதும்.
இந்த குழம்புக்கு ஃபிரிட்ஜில் மிஞ்சிய காய்கறிகளைக்கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.
பஞ்சாபியில் இதற்கு சிந்தி கறி என்று பெயர். இந்த இன்ஸ்டன்ட் சாம்பார் செய்து சாப்பிட சுவை அள்ளும்.