நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் அண்ணாமலை..!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 16-ம் தேதி டெல்லி செல்கிறார்.
டெல்லியில் பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கிறார்.
இந்நிலையில், டெல்லி பயணம் மேற்கொள்ளும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் என் மண், என் மக்கள் என்ற தலைப்பிலான நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் நிறைவு விழா வரும் 25-ம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.