திருவண்ணாமலையில் அண்ணாமலையின் “மாப்ளை”.. கலக்கிய பாஜக.. கடைசியில கலசப்பாக்கத்தில் என்னாச்சு தெரியுமா
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் யார் வேட்பாளர்களாக நின்றாலும் சரி, மோடி தான் வேட்பாளர் என்று நினைத்துக்கொண்டு, நீங்கள் எல்லாரும் ஓட்டளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்படுத்தி வருகிறது. மாவட்டந்தோறும், சாலையின் வழியெங்கும் அண்ணாமலைக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.. ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அண்ணாமலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.
திருவண்ணாமலை : அப்படித்தான், திருவண்ணாமலையில் நடைபயணம் மேற்கொண்டார் அண்ணாமலை. அங்கு ஆயிரக்கணக்கான கூடிய தொண்டர்கள் முன்னிலையிலும் பேசினார்.. திருவண்ணாமலை மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி என்பது எட்டாகனியாக உள்ளது என்றும், மறுபடியும் பாஜக பொறுப்பேற்றவுடன் திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உலகத்தரம் கல்வி மோடி அரசால் ஏற்படுத்தி தரப்படும் என்றும் நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார்.
கலசப்பாக்கம் சட்டசபை தொகுதியில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தின் முக்கியமான பிரச்னை, தரமான கல்வி கிடைக்கவில்லை. தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரமில்லாமல் இருக்கின்றன. தனியார் பள்ளிகளில் கிடைக்கும் கற்றல் திறன், அரசு பள்ளிகளில் கிடைப்பதில்லை…. அரசு பள்ளியை பொறுத்தவரை, தமிழகத்தில் மூடு விழா நடத்தி கொண்டிருக்கிறது..
நவோதயா பள்ளி: நவோதயா பள்ளிகள் மூலம், பணம் வாங்காமல், உலகத்தரம் வாய்ந்த கல்வியை, மோடி இலவசமாக கொடுக்க நினைக்கிறார்.. நாடு முழுதும் நவோதயா பள்ளிகள் உள்ளன. இப்போதுள்ள ஆட்சியாளர்கள், தமிழகத்திற்குள் நவோதயா பள்ளிகள் வராமல் தடுக்கிறார்கள். வரும் 2024 தேர்தலில் வெற்றி பெற்று, பட்டி தொட்டி எல்லாம் பள்ளிகளை கொண்டுவருவது தான் நம்முடைய முதல் வேலையாக இருக்கும்.
திமுக ஆட்சிக்கு வந்து 31 மாதங்கள் ஆகின்றன. இதில், 2 முறைதான், முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார்.. 2022ல் அருணை மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வந்தார். போன வருடம் 2023ல் அதே மருத்துவக் கல்லுாரியின் புதிய கட்டடம் திறப்பு விழாவுக்கு வந்தார்.. அவ்வளவுதான்.