செம அறிவிப்பு : இனி பள்ளி மாணவர்களுக்கும் ஒவ்வொரு மாதம் ரூ.1000..!
பள்ளிக் கல்வித்துறை, உயர்க்கல்வித்துறை மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட்டில் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரசுப் பள்ளியில் பயின்று உயர்க்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் கீழ் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்றும் இந்த திட்டங்கள் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க 2500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.