பிரித்தானிய அரச குடும்பத்தினர் வெளியிட்ட இன்னொரு புகைப்படமும் சிக்கலில்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் வெளியிட்ட அன்னையர் தின புகைப்படம் திருத்தப்பட்டதாக பெரும் விவாதத்தில் சிக்கிய நிலையில், இளவரசர் ஹரி – மேகன் தம்பதியின் புகைப்படம் ஒன்றும் விவாதத்தை சந்தித்துள்ளது.

இரண்டாவது கர்ப்பம் தொடர்பில்
இளவரசர் ஹரி – மேகன் தம்பதி 2021ல் காதலர் தினத்தை முன்னிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தங்களின் இரண்டாவது கர்ப்பம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தனர்.

தொடர்புடைய புகைப்படத்தில் ஹரி – மேகன் தம்பதிக்கு பின்னால் வில்லோ மரம் ஒன்றை இணைத்து, புகைப்படத்தை திருத்தியதாக குறிப்பிட்டு பிரித்தானிய ஊடகங்கள் சில ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அறிவித்தன.

மேலும், ஹரி – மேகன் தம்பதி அப்போது அந்த புகைப்படத்தை கருப்பு வெள்ளையாகவே வெளியிட்டிருந்தனர். ஆனால் அந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள புகைப்படக்கலைஞர் தற்போது உண்மையான வண்ணப் புகைப்படத்தை வெளியிட்டு, விமர்சனம் முன்வைத்துள்ளவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சாடியுள்ளார்.

முதன்மையான இரு செய்தி ஊடகங்களை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள Misan Harriman, தமது புகைப்படத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்றும், கருப்பு வெள்ளையாக மட்டுமே மாற்றப்பட்டு வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தமும் செய்யப்படவில்லை
மேலும், விமர்சகர்கள் முன்வைப்பது போல அது வில்லோ மரம் அல்ல ஜகரண்டா மரம் என்றும் விளக்கமளித்துள்ளார். உண்மை பின்னணியை தெரிந்துகொள்ளாமல் குற்றச்சாட்டை முன்வைப்பது ஆபத்தானது மட்டுமின்றி, ஏற்றுக்கொள்ளவும் முடியாத செயல் என்றும் Misan Harriman கொந்தளித்துள்ளார்.

தொடர்புடைய புகைப்படமானது கருப்பு வெள்ளையாக மட்டுமே மாற்றப்பட்டது. அதில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்றார். அன்னையர் தினத்தில் கேட் மிடில்டன் தொடர்பில் வெளியிடப்பட்ட புகைப்படமானது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

முதன்மையான பல செய்தி நிறுவனங்கள் எச்சரிக்கை அறிக்கையும் விடுத்தனர். இதனையடுத்து வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர், இதுவரை கேட் மிடில்டன் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *