இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கடல் பகுதியில் 6.4 ரிக்டா் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜாபா தீவுக்கு வடக்குக் கடலோரப் பகுதியிலேயே சற்றுமுன்னர் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை எனவும், சுனாமி ஏற்படக்கூடும் என்ற அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *