கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜர் தொடர்பில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் அரசியல் சிக்கலை ஏற்படுத்திய ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை தொடர்பில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில்
இந்திய அரசாங்கத்தால் காலிஸ்தான் தீவிரவாதி என குறிப்பிடப்பட்டுள்ள, கனடாவில் வசித்துவந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது நண்பர் ஒருவரின் குடியிருப்பின் மீது இரவோடு இரவாக துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் சர்ரே பகுதியில் அமைந்துள்ளது Simranjeet Singh என்பவரின் குடியிருப்பு.
இவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் நண்பர் என்றே கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் சர்ரே பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். மேலும் சர்ரே பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வியாழக்கிழமை இரவு சுமார் 1.20 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள் அப்பகுதி மக்கள் மற்றும் சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்தவர்கள் என பலரிடம் பேசியுள்ளதாகவும்,
கண்காணிப்பு கெமாரா காட்சிகளையும் ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சம்பவம் நடந்த குடியிருப்பில் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் சென்ற போது, துப்பாக்கிச் சூடுக்கு பின்னர் மிக மோசமாக சேதமடைந்த கார் ஒன்றை பார்த்துள்ளார்.
இந்திய அரசாங்கம் ஈடுபட்டிருக்கலாம்
அத்துடன் அந்த குடியிருப்பிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்த அடையாளங்களையும் அவர் கண்டுள்ளார். எத்தனைமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்ற தகவல் பொலிஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை.
ஆனால் இது ஏதேனும் குற்றப்பின்னணியுடன் தொடர்புடையாதாக கருதவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மர்ம நபர்களால் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இருப்பினும் அந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மொத்தமாக நிராகரித்துள்ளது. அதன் பின்னர் இந்தியாவுக்கும் கனடாவுக்குமான உறவு விரிசல் கண்டு வந்துள்ளது.