அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீடு உட்பட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை..!

கள்ளக்குறிச்சி தனிதொகுதியின் கடந்த 2016 – 2021 ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் பிரபு. இவர் தற்போது அதிமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். பிரபுவின் தந்தை அய்யப்பா தியாகதுருகம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2016 – 2021 ஆம் ஆண்டு பிரபு கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மற்றும் அவரது தந்தை அய்யப்பா ஆகியோரின் வீடு மற்றும் இவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் என மொத்தம் ஒன்பது இடங்களில் குழுக்களாக பிரிந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபு வீட்டில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் திமுக அரசின் செயலக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்…
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 1, 2024