சுவிட்சர்லாந்தில் யூத எதிர்ப்பு: கத்திக்குத்து சம்பவத்தின் பின்னணியில் வெளியான தகவல்
சுவிட்சர்லாந்தில் யூதர் ஒருவர் மீது நட த்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலானது அந்நாட்டில் யூத எதிர்ப்பை விதைத்து விடுமா என்ற அச்சம் ஏற்பட்டதாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வயோலா அம்ஹெர்ட் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் 50 வயதுடைய யூதர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (02.03.2024) கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவமானது யூத எதிர்ப்பை காட்டுவதாக கருதிய சுவிட்சர்லாந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
கைப்பற்றப்பட்டுள்ள காணொலி
அதன் அடிப்படையில், குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தாக்குதலுடன் தொடர்புடைய காணொளி ஒன்றையும் சுவிட்சர்லாந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த காணொளியில், இளைஞன் ஒருவர், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிப்பதோடு உலகெங்கிலும் உள்ள யூதர்களுக்கு எதிராக போரினை மேற்கொள்ளுமாறும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம்
மேலும், முடிந்த வரை யூதர்களுக்கு தீங்கு விளைவிப்போம் எனவும் அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெறும் யுத்தத்தின் எதிரொலியாக இந்தப் பிரச்சினை உருவாகியுள்ளதாக சுவிட்சர்லாந்து புலனாய்வுத்துறை கூறியுள்ளது.