விஜய்யின் ”கோட்” படத்தில் எதிர்நீச்சல் நடிகை… உறுதி செய்த புகைப்படம் : வைரல் க்ளிக்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கனிகா விஜயின் கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் , படத்தின் இயக்குனர் வெங்ட் பிரபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுரையில் பிறந்த கனிகா திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்டவர். மதுரையில் பிரபலமான பள்ளியொன்றில் படித்த கனிகா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார். ராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் படித்த கனிகா பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இந்த போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வரும் கனிகா சசி கணேசன் இயக்கத்தில் வெளியான ஃபைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அறிமுகமானா இவர், அஜித்தின் வரலாறு சேரனின் ஆட்டோகிராப் படத்தில் நடித்திருந்தார். இதில் ஆட்டோகிராஃப் படத்தில் இறுதிக்கட்சியில் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்திருந்தார்.
தமிழ் திரைப்படங்களைவிட மலையாளத்தில் அதிகம் நடித்துள்ள கனிகா, சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். சீரியலில் நடித்தாலும், சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை கனிகா, கடந்த ஆண்டு தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளீர், வெப்பன், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதேபோல் நடிகைகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வருகிறார்.