Antony – மாஸ் காட்டும் ஜோஜு ஜார்ஜ்.. ஆண்டனி டிஜிட்டல் உரிமை எவ்வளவுக்கு விற்பனை தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரள திரையுலகின் வெரைட்டி ஆக்டராக விளங்குபவர் ஜோஜு ஜார்ஜ். தமிழில் ஜகமே தந்திரம், பபூன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அவரது நடிப்பில் ஆண்டனி திரைப்படம் கடைசியாக வெளியானது. தமிழை பொறுத்தவரை கமல் ஹாசன் – மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜோஜு ஜார்ஜ் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். தமிழில் ஜகமே தந்திரம், பபூன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கும் அவர் கடைசியாக மலையாளத்தில் ஆண்டனி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்குநர் ஜோஷி இயக்கியிருந்தார்.
வெற்றி கூட்டணி: ஜோஷியும், ஜோஜு ஜார்ஜும் இணைந்து ஏற்கனவே பணியாற்றிய பொரிஞ்சு மரியம் ஜோஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனையடுத்து மீண்டும் இவர்கள் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இதில், ஜோஜு ஜார்ஜுடன் கல்யாணி பிரியதர்ஷன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா, ஆஷா சரத் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.
பான் இந்தியா படம்: இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஃபார்ஸ் பிலிம்கோ மோஷன் பிக்சர்ஸ்பெற்றிருந்தது. குறிப்பாக இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுகுறித்து அவர் அண்மையில் அளித்திருந்த பேட்டியிலும் ஜோஷியுடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கலவையான விமர்சனம்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கல்யாணியின் நடிப்பு அட்டகாசமாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்தனர். ஜோஜு அடுத்ததாக தமிழில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் உரிமை: இந்நிலையில் ஆண்டனி படம் பற்றிய புதிய தகவல் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது ஆண்டனி படத்தின் டிஜிட்டல் உரிமையை அல்ட்ரா மீடியா மற்றும் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறதாம். ஜோஜு ஜார்ஜின் சினிமா கரியரில் அதிக தொகைக்கு டிஜிட்டல் உரிமை விற்ற படம் என்றால் அது ஆண்டனி படம்தான் என்று கூறுகிறது.