தேர்தல் களத்தை நெருங்கும் பாஜக.. இடைக்கால பட்ஜெட்டில் புதுக்கணக்கு போடும் மோடி அரசு..!

2024 பிப்ரவரி 1ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதே இதற்கு காரணம்.பொதுவாக, ஆளும் அரசாங்கம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்கும். தற்போது மக்களவை தேர்தல் வேறு நடைபெற உள்ளதால், மத்திய பா.ஜ.க.
அரசு இடைக்கால பட்ஜெட்டில் வாக்காளர்களை கவர என்னென்ன அறிவிப்புகள் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வாக்காளர்களை கவரும் வகையில் இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்றே கூறப்படுகிறது.
அதற்கு பல காரணங்களையும் முன் வைக்கின்றனர் நிபுணர்கள். தற்போதைய தேர்தல் களத்தில் பா.ஜ.க. தான் முன்னால் நிற்கிறது. ஒருமித்த கருத்தை உருவாக்கவே எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணி போராடுகிறது.அதேசமயம் பா.ஜ.க.
தெற்கில் தனது தடத்தை விரிவுப்படுத்துவதற்கான பா.ஜ.க.வின் ஒருங்கிணைந்த முயற்சிகள், பிரதமர் மோடியின் சமீபத்திய கோயில் பயணத்தில் தெளிவாக தெரிகிறது.இதனால் தற்போதைய நிலவரப்படி, தேர்தல் களம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக தெரிகிறது. இதனால் பா.ஜ.க. அரசு வாக்காளர்களை கவர பட்ஜெட்டை பயன்படுத்த மிகவும் கடினமாக உழைக்க வேண்டியதில்லை.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. அரசாங்கம் இடைக்கால பட்ஜெட்டில் வாக்காளர்களை கவரும் பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.2019ல் தாக்கல் செய்த முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் கூட, மக்களவை தேர்தலில் வாக்குகளை ஈர்ப்பதற்காக பா.ஜ.க.
அரசாங்கம் எந்தவொரு பெரிய அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.அப்போது இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இரண்டு பெரிய திட்டங்கள் என்றால், வருமான வரி தள்ளுபடி மற்றும் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜானா திட்டம்.
இந்த இரண்டு திட்டமும், காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியான ரொக்க பணமளிப்பு திட்டத்துக்கும், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் ஏமாற்றமடைந்த நடுத்தர வர்த்தக மக்களை ஈர்க்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை முறியடிப்பதற்கான மூலோபாய பதில்களாக இருந்தன.மத்திய பா.ஜ.க.
அரசாங்கத்துக்கு முட்டுக்கட்டை போடும் வல்லமைமிக்க உத்தியை எதிர்க்கட்சிகள் கையாள வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏனென்றால், நிதிஷ் குமாரின் சாதி வாரி கணக்கெடுப்பு முன்முயற்சியை காங்கிரஸ் ஆதரித்தபோதிலும் அது பலனை