April Release: தேர்தல் தேதிக்காக காத்திருக்கும் படங்கள்! ஏப்ரல் மாதம் வெளியாகும் படங்கள் இதுதான்?

ஸ்டார், தங்கலான் , உள்ளிட்ட சில படங்கள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்

வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறு உள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இப்படியான நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை உறுதிசெய்யாமல் காத்திருக்கின்றன.

தங்கலான்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் காரணத்தினால் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கப் படாமல் இருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *