AR Murugadoss: SK23 படத்தில் மிருணாளை டிக் செய்யாத இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே23 படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் இணைந்துள்ளார்.
படத்தை முன்னணி நடிகர்களான விஜய் உள்ளிட்டவர்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் மீண்டும் அனிருத் இசையமைப்பாளராக இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. கடைசியாக ரஜினியின் தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏஆர் முருகதாஸ். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியாக எஸ்கே 23 படத்தில் இணைந்துள்ளார்.
தற்போது எஸ்கே 21 படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு அமரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. டீசரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான வியூஸ்களை பெற்று வருகின்றன. இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் சாய் பல்லவி. படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ளது. படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படம் உருவாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் எஸ்கே 21 படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாதம் அல்லது மார்ச் மாதத்தில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. காஷ்மீரில் கடுமையான குளிர் மற்றும் பனிக்கிடையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அமரன் படம்: தற்போது சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகள் நடந்து வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். முதல்முறையாக இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். நாளைய தினம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி இன்று மாலை படத்தில் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. படத்திற்கு அமரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.