AR Rahman Birthday: அடேங்கப்பா! இமயத்தை எட்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு! எவ்வளவு கோடி தெரியுமா?
ரஹ்மான் ஒரு படத்திற்கு இசையமைக் 8 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார் (AR Rahman Salary Per Movie). படங்கள் மட்டுமன்றி இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு இசை பள்ளி-கல்லூரிகளும் உள்ளது. இதையனைத்தையும் வைத்து, இவருக்கு மாத வருமானம் மட்டும், ரூ.4 கோடியாக உள்ளதாம். ஆண்டு வருமானம், ரூ.50 கோடியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது (AR Rahman Annual Salary).
வீடு, கார், பங்களா..
ஏ.ஆர்.ரஹ்மானிற்கு சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சொந்தமாக சொகுசு வீடுகளும் உள்ளதாம். அது மட்டுமன்றி, அவர் படம் எடுத்த சமயத்தில் தனக்கென ஒரு ஸ்டுடியோவையும் சென்னையில் கட்டினார். சமீபத்தில் துபாயில் பிரம்மாண்ட இசைக்கூடம் ஒன்றையும் ரஹ்மான் தொடங்கினார். இதன் மதிப்பு மட்டும் பல கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவை தாண்டி, லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலும் இவருக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ஏ.ஆர்.ரஹ்மான் சொந்தமாக ஜாகுவார், மெர்சிடிஸ், பென்ஸ், வால்வோ போன்ற சொகுசு கார்களுக்கும் சொந்தக்காரர் ஆவார் (Cars owned by AR Rahman). ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே பணக்கார இசையமைப்பாளர், நம்ம ஏ.ஆர்.ரஹ்மான்தான் என்று கூறப்படுகிறது. இவரது மொத்த சொத்து மதிப்பு மட்டும் 650 கோடி முதல் 700 கோடிகள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது (AR Rahman Total Net Worth).
வளர்ச்சியும் எழுச்சியும்..
ஏ.ஆர்.ரஹ்மான், சென்னையில் 1967ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பத்தை ‘இசைக்குடும்பம்’ என்றே கூறலாம். ஏ.ஆர்.ரஹ்மானின் இயற்பெயர், ஏ.எஸ். திலீப் குமார். பின்னாளில் இஸ்லாமிய மதத்திற்கு மாறி, பெயரையும் மாற்றிக்கொண்டார். இவரது திறமையை வெளிக்கொணர்ந்தது, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வண்டர் பலூன்” என்ற நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில், இவர் மிக சிறு வயதிலேயே ஒரே சமயத்தில் 4 கீ-போர்டுகளை வாசித்து பல லட்சம் மக்களை கவர்ந்தார். அடுத்து, இவருக்கு பெரிய மேடை ஏறுவதற்கு வழிவகுத்து கொடுத்தவர், ‘மணிரத்னம்’. அவர் இயக்கிய ‘ரோஜா’ படம் மூலமாகத்தான் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.