பிக் பாஸ் 7 டைட்டில் ஜெயித்த அர்ச்சனா!
பரபரப்பாக சென்றுகொண்டிருந்த பிக் பாஸ் 7ம் சீசன் இன்றோடு நிறைவு பெற்றது. பைனலில் மணி, அர்ச்சனா மற்றும் மாயா ஆகியோர் இருந்தனர்.
அதில் மாயா முதல் ஆளாக எலிமினேட் ஆக கடைசியில் மணி மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரில் யார் வெற்றியாளர் என எதிர்பார்ப்பு எழுந்தது. இறுதியில் அர்ச்சனா தான் வின்னர் என கையை தூக்கி அறிவித்தார்.
டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ருபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி 15 லட்சம் ரூபாய்க்கு ஒரு பிளாட் மற்றும் ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.
அந்த காரின் பேசிக் மாடல் விலையே சுமார் 15 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தம் அர்ச்சனாவுக்கு சம்பளம் மட்டுமின்றி டைட்டில் ஜெயித்ததன் மூலம் 80 லட்சம் ருபாய் பரிசாக கிடைக்கப்போகிறது.