ராஷ்மிகாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா?

Vijay Devarakonda Rashmika Mandanna Marriage: தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர், ராஷ்மிகா மந்தனா. இவர், விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தா-விஜய் தேவரகொண்டா காதல்?
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விஜய் தேவரகொண்டாவும் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனாவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள், 2018ஆம் ஆண்டு ‘கீதா காேவிந்தம்’ படத்தில் முதன் முதலில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. இதனால், 2019ஆம் ஆண்டு மீண்டும் ‘டியர் காமரேட்’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். அப்போதே இவர்கள் இருவரும் காதலிப்பதாக ரசிகர்கள் அனைவரும் நினைத்தனர். ஆனாலும், இவர்கள் அப்படி எதுவும் இல்லை என்று மறுத்தனர்.
ஒரே வீட்டில் தங்கியிருக்கின்றனரா?
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தனித்தனியே இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டவை என்றும், தனித்தனியே இவர்கள் இதனை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, இருவரும் ஒன்றாக வேக்கேஷனும் சென்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக தற்போது இன்னொரு தகவலும் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்களின் கணக்கு ஒன்றில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. அதில், ராஷ்மிகா மந்தனாவிற்கு எப்படிப்பட்ட கணவர் கிடைக்க வேண்டும் என்பது குறித்து ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ராஷ்மிகாவின் கணவர் விஜய் தேவரகொண்டா போல இருக்க வேண்டும் என குறிப்பிடப்படுள்ளது. அதற்கு ராஷ்மிகாவும் “அது உண்மைதான்” என்று கமெண்ட் செய்துள்ளார். இதனால், இவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.