மாணவர்களே ரெடியா ? இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு..!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

தேர்வின்போது மாணவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாத வண்ணம் இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முறைகேடுகளை தடுக்க 4,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.

பிளஸ்-2 தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. மன நல நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் மாணவ-மாணவிகளின் பதட்டத்தை தணிக்க எந்தநேரத்திலும் உதவி கேட்பதற்காக 14417 என்ற உதவி எண் ஏற்படுத்தப்பட்டிருந்தது.குறிப்பாக தேர்வுக்கு பயப்படும் மாணவ-மாணவிகள் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *