திருச்சி இளைஞர்களே ரெடியா ? இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (ஜன.19) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, தொழிற்கல்வி என அனைத்து கல்வித் தகுதி பெற்றவர்களும் கலந்து கொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளலாம்.
மேலும், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மதிப்பெண் சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இரண்டு புகைப்படத்துடன் நேரில் சென்று தங்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக தமிழக அரசின் வேலை வாய்ப்பு துறை இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.