இந்த பழத்தில் இவ்வளவு சத்துக்களா? ஆரோக்கியம், சுவையான ரெசிபி இப்படி செய்யுங்க
இலந்தைப் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இலந்தைப்பழம், புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் இருக்கும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. கால்சியம், மெக்னீஷியம் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தை சாப்பிட நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆண்டி-ஆக்சிடண்டுகள் உடலுக்கு நன்மையை தரும். எலும்புகள் உறுதியாகும். ரத்த அழுத்தம் சீராகி, உடல் நலம் பெறும். அந்த வகையில் இலந்தைப் பழ தொக்கு செய்வது குறித்து இங்குப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இலந்தைப்பழம் – 200 கிராம்
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
வறுத்து பொடி செய்த வெந்தயத் தூள் – 1/2 டீஸ்பூன்
வெல்லம் – 50 கிராம்
செய்முறை
இலந்தைப் பழத்தை நன்றாக கழுவி உள்ளே உள்ள கொட்டைகளை அகற்றி பழத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போடு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் அரைத்த இலந்தைப்பழ விழுதை சேர்க்கவும். அதனுடன் மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் பொடி, வறுத்துப் பொடி செய்த வெந்தயம் ஆகியவற்றை போட்டு பின் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். அவ்வளவு தான் கொதித்து வந்ததும் சுவையான இலந்தைப் பழத் தொக்கு ரெடி.