White Heads தொந்தரவா? இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சித்து பாருங்க
வயிட்ஹெட்ஸ் (white heads) என்பது இறந்த செல்கள் அல்லது அழுக்கு குவிந்து உங்கள் துளைகளை அடைக்கும்போது உருவாகின்றது.
அவை துளைக்குள் தங்கி விட்டால் அகற்றுவது மிகவும் கடினமாகும். அவை பொதுவாக மூக்கு, கன்னம், நெற்றி, கழுத்து, மார்பு, முதுகு மற்றும் கன்னங்கள் மற்றும் கைகளின் மேல் பகுதியில் ஏற்படும்.
பொதுவாகவே இது இளம் பருவத்தினரிடம் காணப்படுகிறது. எனவே இது ஏற்பட்டால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி இயற்கையான முறையில் போராடலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
1. தேன்
தேனில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் சக்தி அதிகமாக இருகிறது. ஒரு கண்ணாடி கிண்ணத்தில் தேவையான அளவு தேனை எடுத்து, அதில் சிறியளவில் தண்ணீரும் சேர்த்து கலந்துக்கொள்ளவும். பின் அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
2. கற்றாழை
கற்றாழையில் அஸ்ட்ரிஜென்டாகச் செயற்படும் சக்தி அதிகமாக இருகிறது. எனவே இந்த ஜெல் எடுத்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும்.
3. தேயிலை மர எண்ணெய்
தேயிலை மர எண்ணெய் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஒரு பாத்திரத்தில் தேயிலை மர எண்ணெயை எடுத்து, தேங்காய்,ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும். அடுத்து ஒரு பருத்தி துணியில் அதை நனைத்து 15-20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவி, பின் சூடான நீரில் கழுவவும்.
4. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் பல விட்டமின்கள் இருகிறது. சுத்தமான கையில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி மசாஜ் செய்யவும். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.