பற்களின் மஞ்சள் கறை சிரமப்பட வைக்கிறதா? வெண்மையாக மாற்ற இதோ எளிய முறை
பொதுவாகவே காலையில் கண் விழித்ததும் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதல்.
அன்றாட வாழ்வில் பல் துலக்குதல் ஓர் அத்தியாவசியமான ஒரு செயலாகும். எனவே பல் துலக்குதல் காலைக் கடன்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.
ஆனால் ஒரு சிலர் தங்களது பற்களிற்கு போதுமானளவு அக்கறையை காட்டுவதில்லை. அப்படி செய்வதனால் அவர்களின் பற்களில் மஞ்சள் கறையும் படிந்து விடுவது வழக்கம்.
எனவே அதை எப்படி விரட்டியடிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
கடைப்பிடிக்க வேண்டியவை
உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கவும்.
புகைப்பிடித்தலை நிறுத்துங்கள்.
பானங்களை தவிருங்கள்.
பல் துலக்குவதை தவறவிடாதீர்கள்.
பற்கள் பரிசோதனை செய்வதை தவறவிடாதீர்கள்.
ஸ்டிரா பயன்படுத்துங்கள்.
முறையான டூத்பேஸ்ட் பயன்படுத்தவும்
மஞ்சள் கறையை எப்படி போக்கலாம்?
எலுமிச்சை துண்டை உப்பில் போட்டு பற்களை தேய்த்தால் வெண்மையாக இருக்கும்.
பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையாக மாறும்.
தூங்க செல்வதற்கு முன்பு பல் துலக்கவேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவில் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.