கம்மியா தூங்கும் ஆளா நீங்க? அச்சச்சோ… ‘அது’ வர வாய்ப்பு இருக்கு, ஜாக்கிரதை!!
அதிக செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக இந்நாட்களில் நீரிழிவு நோய் மக்களிடையே அதிகமாக காணப்படுகின்றது. நீரிழிவு நோய் ஏற்பட இன்னும் பல காரணங்கள் உள்ளன. போதுமான தூக்கமின்மையும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க காரணமாகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட பல வித ஆய்வுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது. தேவையான அளவை விட குறைவாக உறங்குபவர்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. போதுமான உறக்கம் இல்லாத நிலை இரத்த சர்க்கரை அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
ஆய்வில் அறியப்பட்டது என்ன?
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சிலரது இரத்த சர்க்கரை அளவுகள் (Blood Sugar Level) பரிசோதிக்கப்பட்டன. தினமும் 7-8 மணி நேரம் வரை தூங்கியவர்களை ஒப்பிடும்போது 5 மணி நேரம் மட்டுமே தூங்கியவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்ததாக கண்டறியப்பட்டது. இப்படிப்பட்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகமாக இருந்தது. தினமும் வெறும் 3-4 மணி நேரம் மட்டும் தூங்கியவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் 41% அதிகமாகும். இப்படிப்பட்ட பல ஆய்வுகள் தூக்கமின்மை (Lack of Sleep) நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகமாக்குவதை தெளிவாக்குகின்றன.
தூக்கமின்மை மட்டும் அல்லாமல் பின்வரும் காரணங்களாலும் இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது:
– ஆரோக்கியமற்ற உணவுகளால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. துரித உணவுகள் (Junk Food), குளிர்பானங்கள், அதிக கொழுப்புள்ள உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வதால் நீரிழிவு நோய் மிக வேகமாக அதிகரிக்கிறது.
– மன அழுத்தம் (Mental Tension) மற்றும் வாழ்க்கை முறையும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான காரணங்கள் ஆகலாம். குறிப்பாக மன அழுத்தம் இரத்த சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்கின்றது.
– மரபணு காரணங்களாலும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. குடும்பத்தில் யாருக்காவது நீரிழிவு நோய் இருந்தால் நமக்கும் சர்க்கரை அளவு அதிகரித்து அதனால் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகமாக உள்ளன.
– உடல் செயப்லாடு என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அவசியமாகும். நமக்கு தேவையான உடற்பயிற்சிகளை (Exercise) தினமும் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இதன் மூலம் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளாலாம். நம் தினசரி வாழ்க்கை முறையில் உடற்பயிற்சியையும் ஒரு அங்கமாக்க வேண்டும். அப்படி செய்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகாமல் தவிர்க்கலாம். செயல்பாடற்ற வாழ்க்கை முறை சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.