கணினி திரையை அதிக நேரம் பார்ப்பவரா நீங்கள்..? கண்களை பாதுகாக்க இதையெல்லாம் பண்ணுங்க

தற்காலத்தில் கணினியின் உதவியின்றி எந்த வேலையும் செய்யமுடியாது எனும் அளவுக்கு தொழிநுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இணையத்தை அடிப்படையாக வைத்து தொழில் புரிவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் இன்னொரு புறம் சமூக வளைத்தளங்களின் பெருக்கமும் அதிகரித்துவிட்டது.

தொழில் கருதியோ அல்லது பொழுது போக்குக்காகவோ இவ்வாறு கணினி திரையை அல்லது செல்போன் திரையை தொடர்ச்சியாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் பலரும் இருக்கின்றோம்.

அதனால் நேரடியாக பாதிப்புக்குள்ளாவது நமது கண்கள் தான். எனவே தற்காலத்தை பொருத்தமட்டில் கண் பராமரிப்பு என்பது இன்றியமையாதது.

தொழில்நுட்ப துறையில் பணிப்புரிவோரும் கணினி மற்றும் செல்போன் திரைகளைில் அதிகமாக நேரத்தை செலவிடுவோரும் கண் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அவர்கள் எவ்வாறு கண்களை பராமரித்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கண்களை பாதுகாக்க…
தற்காலத்தில் குழந்தைகளும் கூட கணினி மற்றும் செல்போனில் விளையாட்டுக்களை பதிவிரக்கம் செய்து விளையாடுகின்றனர்.

இதனை தவிர்க்க பெற்றோர் பிள்ளைகளை வெளியில் சென்று இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு விளையாட பழக்கப்படுத்த வேண்டும்.

தொழில் நிமிர்த்தம் பலரும் தொடர்ச்சியாக 8-9 மணி நேரத்திற்கும் அதிகமாகக் கணினிகளில் வேலை செய்கின்றனர்.

அவ்வாறனவர்கள் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு முறை குறைந்தது இரண்டு நிமிடங்களாவது பார்வையை வேறு இடத்தில் செலுத்தி கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம்.

கணினியைப் தொடர்ச்சியாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் பார்தூர பார்வையிலும் கண்களை ஈடுபடுத்த வேண்டும் இல்லை என்றால் கண்களில் ஈரப்பதம் குறைந்து கழுத்து வலி, தலைவலி ,தூரப்பார்வை குன்றுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கணினித் திரையை முகத்திற்கு நேராகப் படும்படி வைக்காமல் கொஞ்சமாக வேறு திசையில் திருப்பி வைத்து பார்ப்பது சிறந்தது.

தொடர்ச்சியாக கணினியில் வேலை பார்ப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கண் மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அசியம்.

உடலுக்கு போதியளவு தண்ணீர் பருகுவது நீர் சத்து நிறைந்த பழங்களை உண்ணுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவர் உடலுக்கும் ஏற்றவாறு தண்ணீர் குடிக்க வேண்டிய அளவு மாறுப்படும் ஒரு நாளைக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் தண்ணீர் தேவை ஏற்படும் போது வேலை நிமிர்த்தம் அதனை புறக்கணிப்பதால் உடல் மற்றும் கண்கள் ஈரப்பத்தை இழக்கின்றது.

இரவு நேரங்களில் கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் குளிர்ந்த நீரால் அடிக்கடி கண்களை கழுவுவது அவசியம். கண்கள் சோர்வடைவதாக உணரும் பட்சத்தில் கட்டாயம் கண்களை கழுவ வேண்டும்.

கணினியைப் பார்த்தாலே கண்கள் சோர்வு ஏற்பட்டு தலைவலி வருவது, கண்ணில் அடிக்கடி பூச்சி பறப்பது போன்ற உணர்வு ஏற்படுதல் தூரத்தில் இருக்கும் பொருட்கள் மங்களாக தெரிவது போன்ற பிரச்சினைகள் இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *