நீ எல்லாம் இளவரசனா? கோலியை பார்த்து கத்துக்கோப்பா.. கில்லை விளாசிய ஸ்ரீகாந்த்
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக விளையாடி வருகிறார். அவர் கடைசியாக சதம் அடித்து பல டெஸ்டுகள் ஆகிவிட்டது. கில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இதுவரை மூன்று இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 64 ரtன்கள் தான் சேர்த்திருக்கிறார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், கில் அனைத்து விதமான மைதானங்களிலும் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே பிரின்ஸ் அல்லது கிங் என்று அழைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், விராட் கோலியை நாம் ஏன் அனைவரும் கிங் என்று கூறுகிறோம் அவருடைய சாதனையை எடுத்துப் பாருங்கள். கடந்த ஆண்டு டெஸ்ட் மேட்ச் ஒருநாள் கிரிக்கெட் டி20 என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.உங்களால் ஒவ்வொரு ஆண்டும் விராட் கோலி போன்ற ஒரு வீரரை உருவாக்க முடியாது.
ஆனால் நீங்கள் முயற்சி செய்து உங்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டு கோலி போன்ற தகுதியைப் பெற உழைக்க வேண்டும். சில பேர் கில்லை அவர்தான் அடுத்த கோலி,அவர்தான் அடுத்த இது என்றெல்லாம் பாராட்டுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை நாம் கொஞ்சம் பொறுமைக்காக வேண்டும். அவரை ஏன் இளவரசர் என்று கூறுகிறார்கள். நான் அவரை மிகைப்படுத்தி எல்லாம் கூற மாட்டேன். அதே சமயம் அவரை தாழ்த்தியும் நான் பேச மாட்டேன்.
இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் ஒரு மிகைப்படுத்த அணியாக தான் கருதுகிறேன். விராட் கோலி கேப்டனாக இருந்த சமயத்தில் ஒரு இரண்டு ஆண்டுகள் நாம் சிறப்பாக செயல்பட்டோம்.இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் தற்போது நாம் அப்படி கிடையாது. ஒரு இரு மிகைப்படுத்த கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய முழு திறமையை உணர்ந்து விளையாடுவதில்லை.