உங்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு காண்கிறீர்களா?அதன் அர்த்தம் இதுதான்!!
பொதுவாகவே, தூக்கத்தில் பல கனவுகள் வரும். நீங்கள் எழுந்தவுடன், அது நினைவில் இருப்பது அரிது. ஆனால் சில கனவுகள் மறக்க முடியாதவை. கனவில் பல அற்புதங்கள் காணப்படுகின்றன. நம் நிஜ வாழ்க்கையில் நடக்காத அனைத்தும் நம் கனவில் நடப்பதாகவே தோன்றுகிறது. சில கனவுகள் நிஜமாகும்போது பயமாக இருக்கும்.
அதேபோல, பலர் தங்கள் கனவில் தங்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு காண்கிறார்கள். இப்போது அதற்கான அர்த்தம் என்னவென்று இங்கு பார்க்கலாம்.
நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு கண்டால், அது நல்ல அறிகுறி என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். மேலும், நீங்கள் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம் அல்லது உங்களுக்கான துணையை விரைவில் சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.
மேலும், திருமணத்தில் மணமகனும், மணமகளும் பட்டு ஆடை உடுத்தி இருப்பார்கள். ஆனால் அது கிழிந்த மாதிரி நீங்கள் கனவு கண்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தம். புதிய உறவுகளில் ஈடுபடுவதற்கான பயத்தைக் குறிக்கிறது.
அதேபோல, திருமணமான பிறகும் நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கனவு கண்டால், உங்கள் தற்போதைய உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மேலும் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை சரி செய்யுங்கள். வேறு திருமணம் பற்றி நினைக்க வேண்டாம்.