புதுக் கார் வாங்கப்போறீங்களா..? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, தரமான கார் வரப்போகுது..!!
இந்தியாவில் இனி வரும் காலத்தில் கார் மற்றும் பைக் அனைத்தும் மாற்று எரிபொருள் சார்ந்து தான் இருக்கும். எலக்ட்ரிக் வாகனம், சிஎன்ஜி, பயோடீசல், ஹைட்ரஜென் வாயு, 85 சதவீதம் வரையிலான எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் எனக் கச்சா எண்ணெய் இறக்குமதியை எந்த அளவுக்குக் குறைக்க முடியோ அதையெல்லாம் செய்யப்பட்ட உள்ளது.
இதேவேளையில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது லித்தியம் பேட்டரி விலை பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் எலக்ட்ரிக் கார்களின் விலை அடுத்தடுத்து குறைக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு டாடா மோட்டார்ஸ் இரு முக்கியக் கார்களின் விலையைக் குறைத்தது.
இந்த நிலையில் இந்தியாவில் புதிய கூட்டணி உடன், புதிய முதலீடுகள் உடன், புதிய தொழிற்சாலை உடன், புதிய வர்த்தகத் திட்டமுடன் களமிறங்கியிருக்கும் SAIC மற்றும் JSW கூட்டணியின் MG Motor India தனது மூன்றாவது எலக்ட்ரிக் கார் மாடலை இந்தப் பண்டிகைக் காலத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
MG Motor இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன துறையில் பெரும் புரட்சி செய்யக் காத்திருக்கும் வேளையில், சரியான கூட்டணி இல்லாமல் தவித்து வந்தது. ஆனால் தற்போது JSW கூட்டணியின் மூலம் இந்தியாவில் ரவுண்டு கட்டி அடிக்கத் தயாராகியுள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகந சந்தையில் புதிய மாடல்கள் எலக்ட்ரிக் கார்களுக்கு அதிகப்படியான வரவேற்பு இருக்கும் வேளையில், SAIC மற்றும் JSW கூட்டணி இதை மிஸ் செய்யக் கூடாது என முடிவு எடுத்துள்ளது.
சீனாவின் எஸ்ஏஐசி மோட்டார் மற்றும் சஜ்ஜன் ஜிண்டால் ஊக்குவிக்கும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஆகியவை இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் செயல்பாடுகளை இயக்க துவங்குவதன் அடையாளமாகப் புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அடுத்த நிதியாண்டில் மாருதி சுசூகி முதல் ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் வரை சுமார் 12- 15 புதிய எலக்ட்ரிக் கார்கள் சந்தைக்குக் கொண்டு வர உள்ளன. 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய சந்தையில் சுமார் 82,000 எலகட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது இந்தியாவில் விற்கப்படும் அனைத்துப் பயணிகள் வாகனங்களில் எலக்சட்ரிக் வாகனங்களின் பங்கீடு 2% ஆகும். இது 2030ல் 15-20% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, 2025 ஆம் நிதியாண்டில் இது 7 சதவீதம் வரையில் உயர வாய்ப்பு உள்ளது.
சீனாவின் எஸ்ஏஐசி மோட்டார் மற்றும் சஜ்ஜன் ஜிண்டால் ஊக்குவிக்கும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இணைந்து அறிமுகம் செய்யும் புதிய எலக்ட்ரிக் கார் பெரும் புரட்சியைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கார் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை என்றாலும் தீபாவளி, நவராத்திரி பண்டிகையின் போது வெளியாவது உறுதி.