ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
இந்திய சந்தை எக்கசக்க ஸ்மார்ட்போன்கள் குவிந்துக்கிடக்கிறது, காசுக்கு ஏற்ற பனியாரம் என்பது போல் காசுக்கு ஏத்த போன் இருக்கிறது. ஆனால் இதில் நாம் கொடுக்கும் காசுக்கு எந்த போன் பெஸ்ட் என்பதை மையமாக வைத்து பட்ஜெட் ஷாப்பிங் கண்ணோட்டத்தில் பார்க்கப்போகிறோம்.
சந்தைகளில் தற்போது பல்வேறு பிராண்டுகளில் ஸ்மார்ட்போன் கொட்டி கிடந்தாலும், ஆப்பிள், ஒன்பிளஸ், சாம்சங் போன்ற உயர் ரக பிராண்டட் போன்களை பயன்படுத்துவது ஒரு தனி ஃபீல் கொடுக்கும்.
இத்தகைய போன்களுக்கு எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க மக்கள் தயாராக உள்ளனர். இந்த கட்டுரையில் ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் போன்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 11 5ஜி (Oneplus 11 5g): 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 11 5ஜி ரூ.59,990க்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் மிகச்சிறந்த அதிநவீன வசதிகள் கொண்ட பிராண்டட் போன்களில் இது முன்னிலையில் இருக்கிறது.
இதன் பேட்டரி 5,000 எம்ஏஹெச் கொண்டது எனவே ஒரு நாள் முழுவதும் பேட்டரி தாங்கும், அதுமட்டுமல்ல 100வாட் சார்ஜர் மூலம் அரைமணி நேரத்திற்குள் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்.பிரைமரி கேமரா 50 மெகா பிக்சல், அல்ட்ரா வைடு கேமரா 48 மெகா பிக்சல் கொண்டது. ஆண்டிராய்டு 14க்கு அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஐகியூஓஓ 12 5(iQOO 12 5G): இந்த போன் 12ஜிபி ரேம் / 256 ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ.52,999க்கு கிடைக்கிறது, 16 ஜிபி ரேம்/512 ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ.57,999க்கு கிடைக்கிறது.ஆண்டிராய்டு 14 உடன் வரக்கூடிய இந்த ஸ்மார்ட் போனில் பிரைமரி மற்றும் அல்ட்ரா வைடு கேமிரா 50 மெகா பிக்சல் கொண்டது.
ஆட்டோ ஃபோகஸ் திறம் கொண்ட கேமராக்கள் சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவுகின்றன. செல்ஃபி கேமரா 16 மெகா பிக்சல் கொண்டது. இதன் பேட்டரி 5,000 எம்ஏஹெச் கொண்டது எனவே ஒரு நாள் முழுவதும் பேட்டரி தாங்கும், அதுமட்டுமல்ல 120வாட் சார்ஜர் மூலம் அரைமணி நேரத்திற்குள் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்.
ஐபோன் 14/ 13 (Apple iPhone 14/ Apple iPhone 13): வழக்கமாக ஐபோன்கள் வெளியிட்ட ஓராண்டுக்கு பின் அதன் விலை கணிசமாக குறையும். அந்த வகையில் ஐபோன் 14 – 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது ரூ.57,999க்கு கிடைக்கிறது, ஐபோன் 13 -128 ஜிபி ஸ்டோரேஜுடன் ரூ.52,499க்கு கிடைக்கிறது.
இரண்டுமே கிட்டதட்ட ஒரே வடிவம் மற்றும் வசதிகளை கொண்டுள்ளது. டால்பி விஷன் மற்றும் ஏ15 பயோனிக் சிப் கொண்டவை. ஐபோனுக்கே உரிய நவீன அம்சங்களுடன் 12 மெகாபிக்சல் கேமராக்கள் கொண்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23 FE 5G): சாம்சங் கேலக்ஸி எஸ் 23 எஃப்ஈ 5ஜி போன்கள் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ரூ.46,999க்கு இந்த போன் கிடைக்கிறது. 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் எக்ஸினாஸ் 2200 சிப் கொண்டிருக்கிறது.
50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா கொண்டுள்ளது. 8கே ரெசலியூசனுடன் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கிறது. 4,500 எம்ஏஹெச் பேட்டரியுடன் நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி கொண்டது. வையர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு உள்ளது.