எவெரெஸ்ட் மலையேற போறீங்களா ? இனி உங்களுக்கு ஒரு சிப் கொடுக்கப்படும்..!

உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் என்ற பெருமையை உடையது எவரெஸ்ட் மலை. ஒவ்வொரு வருடமும் வசந்த காலத்தையொட்டி மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த மலை உச்சியை அடையச் செல்வார்கள். இவ்வாறு சுற்றுலாவிற்காக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 3,29,993 வசூலிக்கப்படுகிறது. ‘எவரெஸ்டில் ஏறும் வீரர் பயன்படுத்தும் பொருட்களில் 8 கிலோ கழிவுகளை கீழே கொண்டு வந்தால் அவர்களது கட்டணம் திருப்பி அளிக்கப்படும்’ என்ற அறிவிப்பை நேபாள அரசு வெளியிட்டிருந்தது. இதன் மூலம் இமயமலையில் குப்பைகள் குவிவதைத் தடுக்க முயற்சி செய்து வருவதாகவும் நேபாள அரசு அதிகாரிகள் கடந்த ஆண்டு கூறியிருந்தனர்.

இந்நிலையில்,எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (Everest base camp) எனப்படும் மலையடிவார தளம் 18,000 அடி உயரத்தில் உள்ளது.அங்கிருந்து மலையுச்சியை அடையும் முயற்சியில் பனிமழை, பனிப்புயல், பனிச்சரிவு உள்ளிட்ட காரணங்களால், காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது மிக கடினமான செயலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இச்சிக்கலை தவிர்க்கும் முயற்சியாக நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.இது குறித்து பேசிய நேபாள சுற்றுலா துறை தலைமை அதிகாரி ராகேஷ் குருங், “எவரெஸ்ட் மலையேறும் முயற்சியில் ஈடுபடும் அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் உடையில் அணிந்து கொள்ளும் வகையில் ஒரு மின்னணு “சிப்” அரசாங்கத்தால் வழங்கப்படும். இதன் மூலம் மலையுச்சியை அடையும் முயற்சி பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், அவசர காலகட்டங்களில் தேடுதல் பணிகளை எளிதாக்கவும் முடியும்” என தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *