ஈசிஆர் பக்கம் போறீங்களா.. திருவான்மியூரில் இருந்து ஊத்தண்டி வரை.. வாகன ஓட்டிகளுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்

சென்னையிலுள்ள ECR இல் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தை அமைப்பதற்கான டெக்னோ எகனாமிக் சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்கான ஏலங்களை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து ஊத்தண்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகளை மாநில நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 14.6 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

இங்கே இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. முதல் பாலம் ஒரு வழி பாதையாக இருக்கும். அதற்கு மேலே உள்ள பாலம் எதிர் திசையில் ஒரு வழி பாதையாக செயல்படும்.

இங்கே நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, நான்கு வழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான பணிகள் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும்,” என, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

அதாவது சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 14.6 கி.மீ., தூரத்திற்கு இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்படும்.

பட்ஜெட்: இது போக நேற்று பட்ஜெட்டில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்தப்படும். 18 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை சாலைகள் அகலப்படுத்தப்படும். 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.300 கோடியில் மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு செய்யப்படும, என்று பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

வேளச்சேரி சாலை : இது போக வேளச்சேரி-தாம்பரம் சாலையில் கௌரிவாக்கம் மற்றும் சேலையூரில் உள்ள இரண்டு முக்கியமான சாலைகளை விரிவுபடுத்துவதற்கு மாநில அரசு வழிவகை செய்துள்ளது.

இங்கே நிலம் கையகப்படுத்துவதற்கு சுமார் ₹31 கோடியை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் உள்ள சாலை நான்கு வழிச்சாலையாக மட்டுமே உள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்க 6 வழி சாலையாக இதை அகலப்படுத்த வேண்டும். இதற்கான பணிகள் இங்கே விரைவில் தொடங்க உள்ளன.

16 கி.மீ நீளமுள்ள சாலையில் இந்த இரண்டு இடங்களைத் தவிர்த்து ஒரே சீராக ஆறு வழிச்சாலையாக உள்ளது., பள்ளிக்கரணையில் உள்ள 3 கி.மீ நீள சாலை இதேபோல் 4 வழி சாலையாக உள்ளது. இங்கே நிலம் கையகப்படுத்தும் பணி இறுதிக்கட்ட நிலையில் உள்ளது. நாராயணபுரத்தில் இருந்து தனியார் டெக்ஸ்டைல்​​ஷோரூம் வரையிலான சாலையில் பெரிய வளைவும் உள்ளது. நிலங்களின் வகைகள் மற்றும் சொத்துகளின் உரிமைகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *