வெளிநாட்டுக்கு போக போறீங்களா? இதை படிச்சா ஈஸியா செலவை மிச்சம் பண்ணலாம்! செம ஐடியா

சென்னை: மேற்படிப்பு, வேலை, சுற்றுலா இப்படி பல கனவுகளுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது.இப்படி வெளிநாடு செல்வோருக்கும் பெரும் தலைவலியாக இருப்பது இந்திய ரூபாயை அந்த நாட்டு கரன்சிக்கு மாற்றுவது மற்றும் திட்டமிட்டு செலவுகளை மேற்கொள்வது.
அந்த பணிகளை எளிதாக்கி தருபவை தான் டிராவல் கிரெடிட் கார்டு எனப்படும் பயண கடன் அட்டைகள்.டிராவல் கிரெடிட் கார்டு இருந்தா எல்லாமே ஈஸி! வெளிநாடுகளில் நீங்கள் எளிதான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கை கொடுக்கின்றன பயண கடன் அட்டைகள். பிரதான வங்கிகள் பலவும் இத்தகைய டிராவல் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. இதில் தள்ளுபடி, ரிவார்ட் பாய்ண்ட்ஸ், கேஷ்பேக் என பல்வேறு நன்மைகளும் கிடைக்கின்றன.
குறிப்பாக விமான நிலையங்களில் லவுஞ்ச் எனப்படும் ஓய்விடம் பெற நாம நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இந்த கார்டுகள் தள்ளுபடியில் அவற்றை நமக்கு பெற்றுத்தரும். இதன் மற்றொரு சிறப்பம்சம் பயண காப்பீடும் கிடைக்கும். கேட்கவே நல்லா இருக்கே? சரி எப்படி டிராவல் கிரெடிட் கார்டு வாங்குவது, அதில் இருந்து அதிக பட்ச நன்மைகளை பெறுவது எப்படி என அறியலாம்யாரெல்லாம் வாங்கலாம்?அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு அருண் என்பவர் தொழில் நிமித்தமாக ஓராண்டில் குறைந்தது 6 முறையாவது வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார் என வைத்துக் கொள்வோம்.
அவர் பயண கடன் அட்டைகளை கொண்டு எளிதாக ஹோட்டல் முன்பதிவு செய்யலாம், விமான டிக்கெட் பதிவு மற்றும் உணவகங்களில் பரிவர்த்தனை , ஷாப்பிங் செய்வது என அனைத்தையும் சுலபமாக மேற்கொள்ளலாம். இதில் கிடைக்கும் ரிவார்ட் பாய்ன்ஸ் மூலம் பல நன்மைகளும் உண்டு.இரண்டு வகையான கார்டுகள்:பயண கடன் அட்டைகளை பொறுத்தவரை இரண்டு வகைகள் உண்டு.1. கோ – பிராண்டட்2. ஜெனரிக்,கோ பிராண்டட்:குறிப்பிட்ட விமான போக்குவரத்து நிறுவனங்கள், டிராவல் ஏஜென்சிகள், ஹோட்டல்களுடன் இணைந்து பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை தான் கோ பிராண்டட் பயண அட்டைகள். உதாரணம்: ஆக்சிஸ் வங்கி விஸ்தாரா சிக்னேச்சர் கிரெடிட் கார்டு, யாத்ரா எஸ்பிஐ கார்டு, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு ஈஸ்மை டிரிப் கார்டு.நீங்கள் அடிக்கடி விஸ்தாரா விமானத்தில் பயணித்தால் ஆக்சிஸ் வங்கி விஸ்தாரா சிக்னேச்சர் கிரெடிட் கார்டு மிக பயனுள்ளதாக இருக்கும், ஈஸ்மைடிரிப் தளத்தை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு ஈஸ்மை டிரிப் கார்டு பயன்படுத்தி கூடுதல் நன்மைகளை பெறலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *