நாளை திருவண்ணாமலை போறீங்களா ? உங்களுக்கு ஒரு நற்செய்தி..!
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். ஞாயிற்று கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும். திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும். அஷ்டமி நாளில் கிரிவலம் வந்தால் தீவினைகள் போகும்.
பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் நன்மைகள் அதிகம். அதே போல குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர, கடன் தொல்லையில் இருந்து விடுபட, குழந்தை பாக்கியம் கிடைக்க செல்வம் சேர, வறுமை அகல, பாவங்கள்- சாபங்கள் தீர மாசி மகம் நாளில் கிரிவலம் வர வேண்டும்.
மாசி மகத்தன்று பெளர்ணமி கிரிவலம் வருபவர்களுக்கு மறுபிறவி என்பது ஏற்படாது. அது மட்டுமின்றி, அவர்கள் வாழும் வாழும் நாட்களில் அனைத்து விதமான நலன்களையும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ முடியும். மாசி மகம் நாளில் திருவண்ணாமலை திருத்தலம் மட்டுமின்றி, திருப்பரங்குன்றம், பழநி உள்ளிட்ட மலை உள்ள திருத்தலங்களிலும் கிரிவலம் வந்து வழிபடலாம். நினைத்த காரியம் நிறைவேறும்.
இந்நிலையில் மாசி பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு நாளை கூடுதலாக 810 பேருந்துகளும், 24 ஆம் தேதி கூடுதலாக 720 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டின் பிற இடங்களுக்கு கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பாக வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து 23ஆம் தேதி 730 பேருந்துகளும், 24 ஆம் தேதி 640 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.