ஐபிஎல் போட்டியை மொபைலில் பார்க்க போறீங்களா? அப்போ இதை கவனீங்க? எவ்வளவு நெட் செலவாகும்?

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதற்காக ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரம் என்பதால் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் தான் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் தேர்தலும் கிரிக்கெட்டும் ஒரே சமயத்தில் நடைபெறுவதால் எதைப் பார்ப்பது என்ற குழப்பத்தில் நீங்கள் இருக்கலாம். இதனால் தான் ஜியோ சினிமா இம்முறை ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்துள்ளது.

ஆனால் அதற்கான டேட்டாவை மட்டும் நாம் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு போட்டியை பார்க்க எவ்வளவு ஜிபி செலவாகும் என்பதை ஜியோ சினிமா தற்போது விலக்கி இருக்கிறது. அதாவது 480 பிக்சல் குவாலிட்டியில் ஒரு ஐபிஎல் போட்டியை பார்க்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஒன்றரை ஜிபி இன்டர்நெட் காலியாகிவிடும்.

இதேபோல் 720 பிக்சல் குவாலிட்டியில் ஒரு ஐபிஎல் போட்டியை பார்க்க வேண்டும் என்றால் உங்களுக்கு 2.5 gb இன்டர்நெட் காலியாகிவிடும். இல்லை நான் 1080 பிக்சல் குவாலிட்டியில் ஹச் டி தரத்தில் ஒரு ஐபிஎல் போட்டியை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் 12 ஜிபி இன்டர்நெட் உங்களுக்கு காலியாகி விடும். இல்லை நான் அதி நவீன தரத்தில் 4k குவாலிட்டியில் ஒரு ஐபிஎல் போட்டியை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் உங்களுக்கு 25 ஜிபி இன்டர்நெட் காலி ஆகிவிடும்.

இதனால் ஐபிஎல் போட்டியை பார்க்க எந்த மாதிரி இன்டர்நெட் திட்டத்தை போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்து விடுங்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக அளித்துவிட்டு அதற்கான இன்டர்நெட் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்யும் அபாரமான யுத்தியை அம்பானி குடும்பம் கடைப்பிடித்து வருகிறது. இவ்வளவு gb யை என்னால் செலவு செய்ய முடியாது என்றால் நீங்கள் தொலைக்காட்சியில் பணம் கட்டி தான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் எதுவும் இனி இலவசம் கிடையாது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *