உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுறீங்களா? ஆப்பிள் பழத்தை இப்படி சாப்பிடுங்க
பொதுவாகவே ஆப்பிள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பழமாக காணப்படுகின்றது.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே பார்க்க வேண்டிய தேவை இருக்காது என்ற கருத்தும் சமூகத்தில் நிலவுகின்றது.
எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழமான ஆப்பிள் பழத்தில் அதிகளவில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகின்றது.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆப்பிள் உடல் உடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
ஆப்பிள் பழத்தை உடல் எடையை குறைப்பதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆப்பிள் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
ஆப்பிள் பழத்தில் குறைந்த கலோரிகளே காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஆப்பிள் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரையானது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையையும் ஆரோக்கியமான முறையில் பூர்த்தி செய்கின்றது.
மேலும் ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து செறிந்து காணப்படுவதால் இது செரிமான பிரச்சினைகளை தீர்ப்பதுடன் ஆப்பிள் அதிக நேரம் பசி இன்றி இருக்கவும் துணைப்புரியும்.
காலை உணவாக என்ன சாப்பிட்டால் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும் இதற்கு ஆப்பிள் சிறந்த தெரிவாக அமையும்.
ஆப்பிள் பழத்துடன் பீனட் பட்டர் அல்லது சீஸ் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான உணவாக அமையும். ஆனால் சீஸை தேர்ந்தெடுக்கும் போது கொழுப்பு அதிகமாக இல்லாத சீஸாக தெரிவு செய்வது அவசியம்.
காலை உணவாக ஸ்மூதி அல்லது புட்டிங் சாப்பிடுபவர்கள் ஆப்பிள் பழத்தை அதனுடன் கலந்த சாப்பிடலாம்.
ஆப்பிள் பழத்தை பல்வேறு உணவுகளில் சேர்த்து சாப்பிடுவது அந்த உணவின் சுவையை அதிகரித்து நமது சுவை அரும்புகளை திருப்தி அடைய செய்கிறது. இதனால் சுவையானதும் ஆரோக்கியமானதுமாக உணவாக அமையும்.
உங்களது உணவை ஆரோக்கியமான ஒன்றாக மாற்றுவதற்கான அத்தனை ஊட்டச்சத்துக்களும் ஆப்பிள் பழத்தில் காணப்படுகிறது.
எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பல்வேறு வழிகளிலும் ஆப்பிள் பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வது விரைவில் உடல் எடையை குறைக்க துணைப்புரியும்.